Breaking News

கிழக்கு மாகாணத்தில் பால் உற்பத்தியில் வீழ்ச்சி – ரோகித போகல்லாகம!

கிழக்கு மாகாணத்தில் நான்கரை இல ட்சம் பசுமாடுகள் உள்ள போதிலும் பால் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ள தாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகல்லாகம குறிப்பிட்டுள்ளார்.  மட்டக்களப்பு மாவட்ட கால் நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் வாகரை குஞ்சன்குளம் பகுதியில் கால் நடைகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று கருத்து வழங்கியபோது குறிப்பிட்டுள்ளார். மேலும் பால் உற்பத்தி குறைந்துள்ளதாக
வும் அதனை மெருகூட்டும் வகை யில் நடவடிக்கையெடுக்கும்  தரத்தி னை உயர்த்துவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டு ம். 

பால் பண்ணையாளர்கள் வருமான ங்களை ஈட்டும் வகையில் பசுக்களை  நன்கு பராமரிக்கப்படுவதோடு பசுக்க ளின் உற்பத்தியினை மேம்படுத்தி பால் உற்பத்தியினை பெருக்க வேண்டும். 

கோழி வளர்ப்பானது நாற்பத்தைந்து நாட்களில் வருமானங்களை பெறக் கூடிய தொழிலாகும். ஏனைய மாகாணங்களில் முட்டைக் கோழி மற்றும் இறைச்சிக் கோழி வளர்க்கின்றனர். 

கோழிகளை வளர்த்து முட்டை விற்று வருமானங்களை பெறுவதற்கு நாங்கள் கோழிகளை வழங்குகின்றோம். முட்டைக் கோழி மற்றும் இறைச்சிக் கோழி களை வளர்ப்பதற்கு மாதிரிக் கூடுகள் வழங்கப்படவுள்ளது. 

அதற்காக கால் நடை வைத்திய அதிகாரி பிரிவுடன் தொடர்பு கொள்ளுங்கள். அத்தோடு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு வியாபார ரீதியில் தங்களை கொண்டு செல்லவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்போமெனத் தெரி வித்துள்ளார். 

பாடசாலையில் இருந்து விலகியவர்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பிற்கு உதவிகள் வழங்கி வைக்கப்படும். அத்தோடு கரடியனாறு விவசாய பயிற்சி நிலையத்தில் இவர்களுக்கான பயி ற்சிகளும் வழங்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.