Breaking News

அடுத்த தேர்தலில் பங்கேற்பு - விஷால்

நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்த செயலாளர் விஷால், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் கண்டிப்பாக நிற்பதாக தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நேற்றைய தினம் ஒன்று கூடியுள்ளது.  

இதில் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்று ம் உறுப்பினர்கள், நாடக நடிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்துள்ள னர். 

இதில் விஷால் பேசும்போது, ‘நாங்க ள் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு, கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றி வருகிறோம். வாக்குறுதியிலும், விதிமுறையிலும் சிறுதுளியும் மீறவில்லை. 

எங்களது செயல்பாடுகளில் எந்த ஒரு கெட்ட செயலையும் கண்டுபிடிக்க முடியாது. நடிகர் சங்க கட்டடம் கட்ட நிறைய தடங்கல் ஏற்பட்டது. முதலில் புயல், பின்னர் முதல்வர் ஜெயலலிதா மறைவு. வழக்கு என தொடர்ந்து சோத னைகள் ஆட்கொண்டது.

இருந்தாலும், கட்டடம் கட்டி முடித்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தில் உள்ளோம். அடுத்த வருடம் இறுதிக்குள் நடிகர் சங்க கட்டிடம்  நிறைவேற்ற ப்படும்.

பொதுமக்கள் பார்வையிட்டு செல்லும் வகையில் நடிகர் சங்க கட்டடம் கட்டப்படும். அடுத்த நடிகர் சங்க தேர்தலிலும் பங்கேற்கவுள்ளோம் ஏனெ ன்றால், சங்க கட்டிடத்தை பாதியில் விட்டுச் செல்ல மாட்டோம். 

கட்டிடத்தை முடித்த பின்பு, அதன்பின் வரும் தேர்தலில், இளைஞர்களுக்கு வழிவிடுவோம். கேளிக்கை வரியால் தமிழ் சினிமா பாதிக்கப்பட்டுள்ளது. 40 சதவிகிதம் வரி செலுத்திவிட்டு தொழில் நடத்த முடியாது. 

கேளிக்கை வரியை ரத்துச் செய்ய அரசு தரப்பில் இருந்து கருணாஸ் முயற்சி எடுக்க வேண்டும்’ என்றார்.