மஹிந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகளுக்கு பொறுப்பேற்கிறேன்
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசியலில் மிகுந்த அனுபவம் உள்ளவர். எனவே அவருக்கு எனது ஆலோசனை தேவையில்லை. இருந்தபோதிலும் அவர் எடுத்த சகல தீர்மானங்களின் பின்னாலும் நாம் உள்ளோ ம். ஆகவே அவரது காலப்பிரிவில் இடம்பெற்ற தவறுகளுக்கு நான் பொறுப்பேற்கின்றேன் என்று முன்னா ள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவி த்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சர்வதிகாரயாகச் செயற்பட்டதாகவும் அவர் எவருடை ஆலோசனைகளையும் செவிமடுக்கவில்லை எனவும் சில தரப்பினர் குறிப்பிடுகின்றனர். இதேவேளை அதற்கு மாற்றமான கருத்தை மற்றும் சில தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அவர் எமது ஆலோசனைகளின் பிரகாரம் செயற்படாததனால்தான் தேர்தலில் தோல்வியடைந்ததாக சிலர் குறிப்பிடுகின்றனர். எனினும் மஹிந்த ராஜபக்க்ஷ எம்மைவிட அரசியலில் மிகுந்த அனுபவம் உள்ளவர். எனவே அவருக்கு எனது உபதேசம் அவசியமல்ல.
இருந்தபோதிலும் அவர் எடுத்த சகல தீர்மானங்களின் பின்னாலும் நாம் உள்ளோம். ஆகவே அவரது காலப்பிரிவில் இடம்பெற்ற பிழைகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.
மேலும் எமது அரசாங்கம் ஒருபோதும் வைராக்கிய அரசியல் நடத்தப்போவதில்லை. எமக்கெதிராக செயற்படுபவர்களையும் நாம் உரிய சட்டப் பிரகாரம் முன்னெடுப்போமே தவிர சட்டத்திற்கு முரணாக செயற்படப் போவதில்லை.
எனினும் நல்லாட்சி அரசாங்கம் சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கவலையடைய வேண்டியுள்ளது.
பழிவாங்கும் படலத்தையே தேசிய அரசாங்கம் அரங்கேற்றி வருகிறது.
எமக்கெதிராக அரசாங்கம் முன்கெடுக்கும் கெடுபிடிகள் தொடர்பில் எமக்கு மிகுந்த வைராக்கியம் ஏற்பட வேண்டும். எனினும் நாம் மீண்டும் பதவிக்கு வருகின்றபோதிலும் வைராக்கிய உணர்வுடன் செயற்படப்போவதில்லை.
இருந்தபோதிலும் அதன் மூலம் பிழை செய்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது சுதந்திரமாக விட்டுவிடுவதாகவும் பொருள்கொள்ள முடியாது. எனவே பிழைசெய்பவர்களுக்கு எதிராக சட்டத்திற்கு இணங்க நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்.
ஆகவே தேசிய வளங்களை சூறையாடி நாட்டுக்குப் பாதகமான முறையில் செயற்படுபவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருகின்ற போதிலும் நல்லாட்சி யில் இடம்பெறும் பிழைகளைத் தேடிக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது எனக் கருதுகிறேன்.
ஏனெனில் அவ்வாறான மோசடிகளை தற்போதே வெளிப்பட்டு வருகின்றது என்றார்.