வீதியை கடக்கையில் செல்போன் பாவனைக்குத் தடை!
அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்திலுள்ள ஹொனோலுலு நகரத்தில் சாலை யைக் கடக்கும்போது செல்போன்களைப் பயன்படுத்தக்கூடாதென தடை விதி க்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தி ன் தலைநகரம் ஹொனோலுலு. இங்கு பொதுமக்கள் கவனக்குறை வாக சாலையைக் கடக்கும்போது ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் புதிய முயற்சியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.
பொதுமக்கள் சாலைகளைக் கடக்கும்போது தங்களிடம் உள்ள செல்போன் உள்ளிட்ட மின்னணு உபகரணங்களைப் பயன்படுத்த தடைவிதிக்க வகை செய்யும் இந்த புதிய சட்ட மசோதா கடந்த ஜூலை மாதம் நிறைவேற்ற ப்பட்டது.
இச் சட்டம் கடந்த 25-ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே, இனி தெருக்கள் அல்லது சாலைகளை கடக்கும்போது செல்போனில் பேசி க்கொண்டு சென்றாலோ, மெசேஜ் டைப் செய்துகொண்டு சென்றாலோ சட்டப்படி குற்றமாகும்.
இந்த தடையை மீறும் வகையில், சாலையை கடக்கும்போது செல்போன் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. முதல் முறை இந்த சட்ட த்தை மீறுவோருக்கு 35 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.
திரும்பவும் மீறினால் 74 டாலர்களும், மூன்றாவது முறை மீறினால் 99 டாலர்க ளும் அபராதம் விதிக்கப்படும். ஆனால் அவசர சேவை அழைப்புகளுக்கு இந்த தடை பொருந்தாது.
இதேபோல் மற்ற நகரங்களுக்கும் இச் சட்டம் முன்மொழியப்பட்டது. ஆனால், அது சட்டமாக நிறைவேற்றப்படவில்லை.