“எல்லாளன்”படை நடவடிக்கையில் வீரகாவியமான 21கரும்புலிகளின் நினைவு நாள் இன்று
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் முக்கியத்துவ முடிய தாக்குதல்க ளின் பட்டியலில் இடம் பிடித்த எல்லாளன் தாக்குதல் நடவடிக்கை 22.10.2007 அன்று தலைவர் அவர்களின் இரகசிய திட்டத்திற்கிணங்க நடத்தப்பட்டு பெரும் வெற்றியும் ஈட்டப்பட்டது.
எல்லாளன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் பத்தாண்டுகள் நிறை வடைந்துள்ளன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைக்கற்களை உடை ப்பதற்கான ஒவ்வொரு முயற்சியின்போதும், கரும்புலிகள் தம்மை ஆகுதி யாக்கியுள்ளார்கள்.
மேலும் வன்னி மண்ணை போரிருள் சூழத் தொடங்கிய போது அதனை முறிய டித்து ஒளியேற்றுவதற்கான பெரும்பணியை நிறைவேற்றுவதற்காக லெப். கேணல் இளங்கோ தலைமையில் 21 வீரர்கள் சிறப்பு நடவடிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
எல்லாளன் நடவடிக்கை என்பது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது தமிழீழ விடு தலைப் புலிகளின் சிறப்புக் கரும்புலி அணியினர், 2007 அக்டோபர் 22 முன்காலையில் நடத்திய தாக்குதலாகும்.
இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளால் தரை மற்றும் வான் வழித் தாக்குதல்கள் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்நடவடிக்கை யின் போது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் 21 பேரும் இலங்கை வான்ப டையினர் 13 பேரும் இராணுவத்தினரில் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலதிகமாக தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வானூர்திகளும் அழி க்கப்பட்டன. ஈழப்போர் தொடங்கியதிலிருந்து கரும்புலிகளால் மேற்கொ ள்ளப்பட்ட பெரிய தாக்குதல் இதுவாகும்
22.10.2007 அன்று தமிழீழ விடுதலை ப்புலிகள் சிறீலங்கா வான்படைத்தளத்தை தாக்கி அழித்த நாள்.