அரசியலமைப்பு முயற்சியை உடனடியாக கைவிடுங்கள்
அஸ்கிரிய, மல்வத்த பீடங்கள் கூட்டாக அரசாங்கத்திற்கு அறிவிப்பு
இலங்கைக்கு புதிய அரசியலமைப்புத் தேவையில்லை.இருக்கின்ற அரசியலமைப்பே போதுமானது. எனவே புதிய அரசியலமைப்பை உருவாக்க முன்னெடுக்கும் முயற்சிகளை உடனடியாக அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் அறிவித்திருக்கின்றன.
தற்போது முன்னெடுக்கப்படும் புதிய அரசியலமைப்பினூடாக நாட்டில் பிளவு ஏற்படும் அபாயம் இருக்கின்றது. எனவே அரசாங்கம் இந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்
டும். அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள்
அறிவித்திருக்கின்றன.
புதிய அரசியலமைப்பு மற்றும் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக நேற்றுகூடிய அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் நிர்வாகக் குழுக்கள் இந்த முடிவை எடுத்துள்ளதுடன் அரசாங்கத்திடம் கோரிக்கையையும் விடுத்திருக்கின்றன.
கண்டி தலதாமாளிகையில் நேற்று கூடிய இந்த அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் நிர்வாகக் குழு பிரதிநிதிகள் புதிய அரசியலமைப்பு முயற்சிகள் மற்றும் இடைக்கால அறிக்கை தொடர்பாக விரிவாக ஆராய்ந்திருக்கின்றன.
இதன்போதே அரசாங்கம் அரசியலமைப்பை உருவாக்கவேண்டும் என்ற முயற்சியை கைவிட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெ ளியிட்ட மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் பிரதிநிதிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
மல்வத்து பீடத்தின் மல்வத்து பீடத்தின் தேரர் விமலதர்ம தேரர் இது தொடர்பில் குறிப்பிடுகையில்,
நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு அவசியமில்லை. எமக்கு புதிய அரசியலமைப்பு தேவையில்லை. இருக்கின்ற அரசியலமைப்போ போதுமானது.
அரசாங்கத்தின் இந்த அரசியலமைப்பை தயாரிக்கும் முயற்சியே முழு இலங்கையினதும் தேரர்கள் எதிர்க்கின்றனர். அரசாங்கத்திற்கு எமது எதிர்ப்பை நாங்கள் வெ ளியிடுகின்றோம்.
உடனடியாக இந்த செயற்பாடுகளை நிறுத்துங்கள். தற்போதைய அரசியலமைப்பின் மூலம் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் இருக்கின்றன. எனவே அது போதுமானது இது மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்க செய்யும் ஒர தந்திர நடவடிக்கையாகும்.
இதன் மூலம் நாட்டுக்க எந்த பலனும் இல்லை.
முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர். ஜெயவர்தன மேற்கொண்ட செயற்பாட்டினால் எமது நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
மேலும் ஜனாதிபதியின் அதிகாரங்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என்றார்.
அஸ்கிரிய பீடத்தின் பிரதிநிதி மெதகம தம்மானந்த தேரர் குறிப்பிடுகையில்,
புதிய அரசியலமைப்போ அல்லது அரசியல் திருத்தமோ தற்போது முன்வைக்கப்டப வேண்டிய அவசியம் இல்லை.
அது நாட்டு மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற பேச்சுவார்த்தைகளே எம் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஏற்பாடுகள் மூலம் நாட்டுக்கு பாதகம் ஏற்படும். நாடு பல பிரிவுகளாக பிரியும்.
எனவே தற்போது இருக்கின்ற அரசியலமைப்பு போதுமானது அதனையே தொடர்ந்து பேணுவோம். புதிய அரசியலமைப்பு தேவைப்பட்டால் அதனை புதிய பிரவேசத்தில் செய்யலாம். அதுவரை தற்போது முன்னெடுக்கப்படும் பணிகளை நிறுத்திவிடுங்கள் என்றார்.