கட்டலோனியா தனிநாட்டிற்கான தீர்வையெடுக்க 5 நாள் அவகாசம் - ஸ்பெயின் பிரதமர்
ஸ்பெயினில் இருந்து பிரிவது ரீதி யாக ஐந்து நாட்களுக்குள் தீர்க்க தரி சனமான தீர்வையெடுக்குமாறு கட்ட லோனியா தலைவருக்கு ஸ்பெயின் பிரதமர் கால அவகாசம் வழங்கியு ள்ளார்.
ஸ்பெயினின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாண மான கட்டலோனியா தனி நாடக பிரி வது ரீதியாக வாக்கெடுப்பை கடந்த 1-ம் தேதி மேற்கொண்டுள்ளது.
இவ் வாக்கெடுப்பில் பங்கேற்ற 2.3 மில்லியன் மக்களில் 90% பேர் தனி நாடாக கட்டலோனியா பிரிவதற்கு ஆதரவு வழங்குவதாகவும் இதைய டுத்து தனி நாடாக பிரிவது நியமென கட்டலோனியா தலைவர்கள் தெரிய ப்படுத்தியுள்ளனர்.
நேற்று கட்டலோனியா பகுதி பாராளுமன்றத்தில் பேசிய பியுங்டிமாண்ட், தனிநாடு வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்பதாக தெரிவித்தபோதிலும் தனிநாடு குறித்த அறிவிப்பை தெரிவிக்கவில்லை.
மாட்ரிட் உடன் கலந்துரையாடி தீர்வு காணப்படுமெனத் தெரிவித்துள்ள நிலை யில், தனிநாடாக பிரிவது குறித்து பரிசீலனை செய்து ஐந்து நாட்களுக்குள் முடிவை தெரிவிக்கும்டி ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் தெரிவித்து ள்ளார்.
ஸ்பெயின் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் “நேற்று கட்டலோனியா சுதந்திரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டதா? இல்லையா? என்பதை ஸ்பெயின் மக்களுக்கு பியுங்டிமாண்ட் தெளிவுபடுத்த வேண்டிய தேவையுள்ளது.
மேலும் ! இறுதியாக யோசித்து சிறந்த முடிவெடுக்க அவருக்கு ஐந்து நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வருகிற 19-ம் தேதி காலை 10 மணிக்குள் தனது முடிவை தெரிவிக்க வேண்டு ம்”, என ஸ்பெயின் பிரதமர் மரியானோ பேசினார்.
ஸ்பெயினுடன் கட்ட லோனியா இணைந்திருக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் அந்நாட்டின் தலைநகரில் பேரணிகள் இடம்பெற்றன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் மாட்ரிட்டில் ஒற்றுமையை வலியுறுத்தி பேர ணியில் பங்கேற்றனர். அதே நேரத்தில் கட்டலோனிய நகரமான பார்சிலோ னாவில் இப்பிரச்னைக்கு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையை வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடாத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.