Breaking News

கிளிநொச்சி மகா தேவா சிறுவர் இல்ல நிர்வாகத்திற்கு நீதிமன்றம் எச்சரிக்கை !

கிளிநொச்சி மகா தேவா சைவ சிறார் இல்லச் சிறார்களை தாக்கிய குற்ற ச்சாட்டில் சிறுவா் இல்ல இளைஞனை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் தடுத்து வைக்க கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பி த்துள்ளதுடன், சிறுவா் இல்ல நிர்வாகிகளையும் நீதிமன்றம் வன்மையாக கண்டித்துள்ளது. 
கிளிநொச்சி மகா தேவா சைவ சிறார் இல்ல சிறுவா்கள் சித்திரவதை தொடு க்கப்பட்டதாக கடந்த வாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் சிறுவன் ஒருவனின் தந்தையால் மனுத் தாக்கல் தொடுக்க ப்பட்டது. 

தொடர்ந்து கிளிநொச்சி சிறுவா் நன்ந டத்தை அதிகாரிகள் குறித்த சிறுவா் இல்லத்தில் சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனா் என்ற சந்தேகத்தில் ஐந்து சிறுவா்களை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு அனுமதித்திருந்தனர். 

இந் நிலையில் திங்கட்கிழமை இவ் வழக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சிறுவா் இல்லத்தில் இருக்கின்ற இளை ஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், இல்லத்தின் நிர்வாகிகளையும் வன்மையாக கண்டித்துள்ளது. 

அத்தோடு மாவட்ட சிறுவா் நன்நடத்தை அதிகாரிகளை சென்று சிறுவா்களின் நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கை வழங்கப்படவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இதேவேளை, தமது சிறுவர் இல்லத்தில் எவ்விதமான வன்முறைகளே அல்லது குறித்த சம்பவங்கள் எதுவுமோ இடம்பெறவில்லையென மாகா தேவா சிறுவர் இல்லத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்த நிலையில் இவ்வாறு நீதிமன்றத்தால் இளைஞனுக்கு விளக்கமறியலும் நிர்வாகத்திற்கு வன்மை யாக கண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.