Breaking News

வடமத்திய மாகாணத்தின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு


வடமத்திய மாகாணத்தின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.

வடமத்திய மாகாணத்தின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்றது.

33 உறுப்பினர்களை கொண்ட வடமத்திய மாகாண சபையில் 21 உறுப்பினர்களை பெற்று ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்பு ஆட்சியமைத்திருந்தது.

இதில் ஐக்கிய தேசிய கட்சி 11 உறுப்புரிமைகளையும், ஜேவிபி 1 உறுப்புரிமையையும் பெற்றிருந்தது.இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் பதவிக்காலம் கடந்த 28 ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.