மீண்டும் விஸ்வரூபத்தில் வித்தியா படுகொலை வழக்கு!
குற்றவாளிகள் சார்பில் தனித்தனியாக மேன்முறயீடு................!
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனைக் குற்றவாளிகள் சார்பாக மேன்முறையீடு தொடுக்கப்ப ட்டுள்ளது. இம் மேன் முறையீட்டி னை குற்றவாளிகளின் சட்டத்தரணி களும் சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளும் தனித்தனியாக யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் தொடு த்துள்ளனர். வித்தியா கொலை வழக்கின் ஏழு குற்றவாளிகளுக்கு விதி க்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக கண்டி போகம்பரை சிறைச்சாலை யின் அத்தியட்சகர் மேன்முறையீட்டு மனுவை பதிவுத்தபால் மூலம் அனுப்பி யுள்ளார்.
மேலும், வழக்கின் பிரதான குற்றவா ளியான மகாலிங்கம் சசிகுமார் (சுவி ஸ்குமார்) மற்றும் அவரது சகோதர னான மகாலிங்கம் சசிதரன் ஆகி யோர் சார்பில் சட்டத்தரணி ஆறு முகம் ரகுபதி மேன்முறையீடு தாக்க லை தொடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ள மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பில் நீதாய விளக்கத் தீர்ப்பாய நீதிபதிகளுக்கு தெரிவிக்கப்படவுள்ளது.
இதன் பின்னர் உயர் நீதிமன்றத்திற்கு குறித்த மேன்முறையீட்டு மனு சமர்ப்பி க்கப்படவுள்ளது.
இதேவேளை வித்தியா படுகொலையுடனான ஏழு குற்றவாளிகளுக்கு கடந்த மாத இறுதியில் மரண தண்டனையும், 30 வருட கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டிருந்தமை யாவரும் தெரிந்த விடயமே.