Breaking News

வேட்பாளர் தெரிவில் கட்சிகள் தீவிரம்

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத்­தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான வேட்­பாளர் தெரிவில் பிர­தான கட்­சிகள் உட்­பட சகல தரப்­பி­னரும் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றனர். பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகி­ய­வற்­றிற்கு சவால் விடுக்கும் வகையில் இம்­முறை கூட்டு எதி­ர­ணி­யினர் தனி­யாக கள­மி­றங்­க­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

அத­ன­டிப்­ப­டையில் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்ள வேட்­பா­ளர்­களை தெரிவு செய்யும் முக­மாக ஐக்­கிய தேசியக் கட்சி 17 வேட்­பு­மனு தெரி­வுக்­கு­ழுக்­களை அமைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பாளர் தெரிவுப் பட்­டி­யலை இம் மாத இறு­திக்குள் பூர்த்தி செய்­யு­மாறு ஐக்கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க வேட்­பு­ மனு தெரிவுக்­ கு­ழுக்­க­ளுக்கு அறிவு­றுத்தல் வழ ங்­கியுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

நீண்­ட­காலம் இழு­பறி நிலையில் காணப்­பட்ட உள்­ளூ­ராட்சி சபைத்­தேர்தல் எதிர்­வரும் ஜன­வரி மாதத்­துக்குள் நடத்­தப்­ப­டு­மென அர­சாங்கம் தெரி­வித்­த­தை­ய­டுத்தே கட்­சிகள் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­கான செயற்­பா­டு­களில் தீவி ரம் காட்டத் தொடங்­கி­யுள்­ளன. 

இரு பிர­தான கட்­சி­களைப் போன்று இம்­முறை கூட்டு எதி­ர­ணி­யி­னரும் நாட­ளா­விய ரீதியில் போட்­டி­யி­ட­வுள்­ள­தா­கவும் அதற்­கான வேட்­பாளர் தெரி­வினை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர். 

அத­ன­டிப்­ப­டையில் இம்­முறை தேர்­தலில் மும்­முனைப் போட்டி நில­வு­மென அர­சியல் அவ­தா­னிகள் கருத்து தெரி­விக்­கின்­றனர். 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு சவால் விடுக்கும் வகையில் சகல உள்­ளூ­ராட்சி சபை­க­ளிலும் கூட்டு எதி­ர­ணி­யினர் போட்டியிடவுள்ள நிலையில் கூட்டு எதி ரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை சமரசம் செய்யும் முயற்சிகளிலும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.