Breaking News

அடுத்த முதலமைச்சர் மாவை சேனாதிராஜா – சிறிதரன் தெரிவிப்பு ! (காணொளி இணைப்பு)

வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சருக்கான அனைத்துத் தகுதிகளும் அண்ணன் மாவை சேனாதிராஜாவுக்கே உரியதென அவரே அடுத்த வடமா காண முதலமைச்சர் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பகிரங்கப்படுத்தியுள்ளார். 


நேற்றைய தினம்  காங்கேசன்துறை யில் தமிழரசுக் கட்சியின் கிளை அலு வலகம் திறந்துவைத்து உரையாற்று கையிலேயே மேற்கூறியவாறு குறி ப்பிட்டுள்ளார்.  

மேலும் தெரிவிக்கையில், கடந்த கிழமை என்னிடம் பலர் அடுத்த வட மாகாண முதலமைச்சர் பிரதம நீதிய ரசர் ஸ்ரீபவனா என வினவினர். நான் அதற்கு, நீதியரசர் ஸ்ரீபவனை நியமிப்பது தொடர்பாக கட்சி எவ்வித முடிவையும் மேற்கொள்ளவில்லை. 

இருப்பினும், வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக வருவதற்கு தமிழ ரசுக் கட்சியின் தலைவர் அண்ணன் மாவை சேனாதிராஜாவுக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளதெனவும் ஆகவே, அடுத்த முதலமைச்சராக எமது கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவே நியமிக்கப்படுவார் எனத் தெரிவித்து ள்ளார்.