Breaking News

விடுதலைப் புலிகளின் தலைவரின் வாசகத்தை ஏந்திய முஸ்லிம் மக்கள் !

யாழ். மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கான வீட்டுத்திட்டத்தை முழுமை யாக வழங்குமாறு வேண்டி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. 
யாழ். முஸ்லிம் சமூக அமைப்பி னால் இப்போராட்டம் ஒழுங்கமைக்க ப்பட்டு  இப்போராட்டத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெ ண்கள் போன்றோர் கலந்து சிறப்பி த்துள்ளனர். 

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவரின் வாசகம், மதியுரைஞர் அன்ரன் பால சிங்கம் மற்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரி கேடியர் தமிழ்ச்செல்வன் ஆகியோரின் வாசகங்கள் ஏந்திய பதாகைகளை கை யேந்திய போராட்டம் நடாத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், குறித்த தலைவர்கள் தம்மை ஏற்றுள்ள வகையில் ஏன் சில தமிழர்கள் தம்மீது இனத்துவேசம் காட்டுவதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்து ள்ளனர்.