Breaking News

விசாரணைக்காக அழைக்கப்பட்ட வி.செ. சிவகரன் தகவல்

20/10/2017 இன்று நான்காம் மாடியின் 2 ம் பிரிவு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணைக்கு சென்றிரு ந்தேன். 3 மணிநேரம் விசாரணை நடை பெற்றது. *மாவீரர் தினம் *மே.18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பு ஆகிய நினைவு நிகழ்வு நடாத்தியது. தவறு எனகூறினார்கள். 

மேலும் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் எனது செயற்பாடு தொட ர்வதாகவும்  நல்லாட்சியையும் நல்லி ணக்கத்தையும் குளப்புவதாகவும் கூறி னார்கள். அவர்களின் வாதம் எதனையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்திற்கும் மறுப்பு தெரிவித்தேன். என்னை அமைதியாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்கிறார்கள். என்பதை புரிந்து கொண்டேன். 

மேலதிக விடயங்கள் ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும். 

"ஆனாலும் அறம் வெல்லும்"