வவுனியாவில் வாள்வெட்டு பலர் படுகாயம்!
வவுனியா பண்டாரிக் குளத்தில் நேற்றிரவு 7.45 மணியளவில் வாள்வெட்டு த்தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு உந்துருளிகளில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவே வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இத்தா க்குதலில் ஒரு கடை முற்றாக சேத மாக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு முச்சக்கரவண்டிகளும் சேதமாக்கப்ப ட்டுள்ளதாக காவல்துறையினர் தெரி வித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்றபோது அவ்வீதியால் சென்றுகொண்டிருந்த மக்கள்மீதும் குறித்த குழுவினால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.