Breaking News

வடக்கில் ஆட்கொண்டுள்ள நிலங்களை விடுவிக்க மேலும் இரண்டு வருடங்கள் தேவையாம் !

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தி னரின் கைவசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு மேலும் இரண்டு வருடங்கள் தேவையென  அமைச்சரவை முடிவுகளை தெரிவி க்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்கத் திணைக்களத்தில் இடம் பெற்றவேளை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவி ரத்ன  தெரிவித்துள்ளார். 

மேலும் வடக்கில் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு புதியதொரு வழிமுறை உள்ளதெனால் மேலும் இரண்டு வருடங்களுக்குள் பாதுகாப்பு நிலமைகளைக் கவனத்தில் எடுத்து நிலங்கள் விடுவிக்கப்படும்.

அல்லது அதற்கு மாற்றீடாக காணிகள் வழங்கப்படுமெனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் 5 ஆயிரத்து 299.39 ஏக்கர் நிலப்பரப்பும், கிளிநொச்சி மாவட்டத்தில் 1,984 ஏக்கர் நிலப்பரப்பும், வவுனியாவில் 27,230 ஏக்கர் நிலப்பரப்பும், மன்னார் மாவட்டத்தில் 3ஆயிரத்து 299 ஏக்கர் நிலப்பரப்பும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 9ஆயிரத்து 148 ஏக்கர் நிலப்பரப்பும் இராணு வத்தினரின் கையகத்து உள்ளதுடன்  முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினர் வசமான அடையாளமென கொள்கை வகுப்பு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.