வடமாகாண முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு – ஜயம்பதி விக்கிரமரட்ண!
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பிரபலமடைவதற்கா க கடும்போக்குக் கருத்துக்களை தெரி விப்பதாக ஜயம்பதி விக்கிரமரட்ண குற்றம் சாட்டியுள்ளார். வடமாகாண முதலமைச்சர் இடைக்கால அறி க்கையை நிராகரித்ததோடு, அதில் சிங்களத்தில் ‘எக்சத் ரட்ட எனவும், ஆங்கிலத்தில் யுனை ரட் கன்றி (United Country) எனவும் தமிழில் ஐக்கிய இல ங்கை எனவும் வர வேண்டுமென அண்மையில் கருத்து வழங்கியிருந்தார். மேலும் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியபோதே தெரிவிக்கையில், ஆரம்ப த்தில் விக்னேஸ்வரன் எம் அனைவரினதும் கௌரவத்துக்குரியவர் எனவும் கொழும்பில் வசிக்கும்போது இவ்வாறான கடும்போக்காளராகச் இருக்க வில்லை தற்போது மாற்றமடைந்துள்ளார்.
அத்துடன் அண்மைக்காலமாக தான் பிரபலமடைவதற்கான கருத்துக்க ளையே முன்னிலைப்படுத்துவதாகவும் விக்னேஸ்வரனைப் பொறுத்தவரை அரசியலமைப்பை அவர் விரும்பவில்லையெனவும் ஜயம்பதி விக்கிரமரட்ண குற்றம் சாட்டியுள்ளார்.
அச்செயற்பாடுகள் நடைபெறாதிருக்கவேண்டுமென்பதையே அவர் விரும்பு கின்றார். அரசியலமைப்பு செயற்பாடுகளை இடைநிறுத்தி நாட்டில் கடும்போ க்குவாத தீயை மூட்டியவாறு இருக்கவேண்டுமென விரும்புவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வடக்கில் அவர் கடும்போக்கு தீயை மூட்டிக்கொண்டிருக்கும் நிலையில் தெற்கிலும் கடும்போக்குவாத தீயை மூட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
அத்து டன் அவரது சொற் பிரயோகங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது யுனைரட் கன்றி (United Country) என வந்தால் வேறுபட்ட இராச்சியங்கள் ஒன்றிணைகின்றன என்ற பொருள்கோடலே வருகின்றது.
அதனை தெற்கில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆகையால் விக்னேஸ்வர னின் கருத்தினை ஏற்றுக்கொள்ளமுடியாதென ஜயம்பதி விக்கிரமரட்ண தெரி வித்துள்ளார்.