செய்ய முடியாத ஒன்றைச் செய்வதாக - பைசர் முஸ்தபா

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அறி விக்கும் வர்த்தமானி அறிவிப்பை அடுத்த மாத ஆரம்பத்தில் வெளியிட தீர்மா னித்துள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 

இதற்கமைய எதிர்வரும் மாத ஆரம்ப பகுதியில் தேர்தலை நடத்து வதற்கா ன திகதி வெளியாகவுள்ளமை குறிப்பி டத்தக்கது. கடந்த இரண்டு வருடங்க ளாக ஒத்திவைக்கப்பட்டு வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்த லுக்கான வர்த்தமானி அறிவிப்பை விடுப்பது தொடர்பான ஊடகவியலா ளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் அமை ச்சர் பைசர் முஸ்தபா கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ளார். 

“அமைச்சரவையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அம்பகமுவ மற்றும் நுவரெலியா உள்ளூராட்சி சபைகள் பிரிக்கப்பட்ட விதம் தொடர்பில் அமைச்ச ரவை பத்திரத்தை சமர்பிக்கவுள்ளேன். 

அதற்கடுத்து புதன்கிழமை வர்த்தமானி பத்திரத்தில் கையெழுத்திட எதிர்பா ர்க்கின்றேன். அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரிக்கப்படுகின்ற சட்டத்திரு த்தத்தை தனித்து என்னால் மட்டும் மேற்கொள்ள முடியாது. 

இத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் கட்சித் தலை வர்கள் கலந்துகொண்ட உரையில் கலந்துரையாடினோம். இதன்போது யோசனை ஒன்று கொண்டுவரவும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் கூறாத ஒருவிடயத்தை திருத்தம் செய்ய என்னால் யோசனையன்று முன்வைக்கப்பட வேண்டுமாம். இது நகைப்புக்குரிய விட யம்தானே. 

ஆனால் நான் கூற விடயத்திற்கு மாறாக இதனையே செய்யும்படி தேர்தல்கள் ஆணைக்குழுவும் சட்டமா அதிபர் திணைக்களமும் கூறினார்கள். எனினும் எந்த திருத்தத்தையும் செய்ய ஒருமாதம் செல்லும். இந்நிலையில் திருத்த ங்களை கொண்டுவந்து தேர்தலை ஒத்திவைக்க முஸ்தபா முயற்சி செய்வ தாக குற்றம் சாட்டுகின்றனர். 

திரிபுபடுத்தப்பட்ட சட்டப்பிரிவில் தேர்தலை நடத்த என்னால் முடியாது. எவ்வாறாயினும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தபோது இருபிரதான கட்சிகள் மட்டுமன்றி சிறுபான்மையின கட்சிகளுடனும் பேசியே இந்த வரைபை தயாரித்தி ரு ந்தேன்” என தெரிவித்துள்ளார். 

இதேவேளை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் திகதி தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து பேச்சு நடத்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணை க்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து கலந்துரையாடினர். 

 தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், சுதந்திரக் கட்சி சார்பாக லசந்த அழகியவன்ன, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச, ஜே.வி.பி சார்பில் சுனில் ஹந்துநெத்தி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். 

இக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தேர்த ல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அனைவரது எதிர்பார்ப்பு க்களுக்கு அமைய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பை அடுத்தமாதமே மாகாண சபைகள் அமைச்சர் விடு க்கின்ற பட்ச த்தில் ஜனவரி மாதம் தேர்தலை நடத்திமுடிக்க முடியுமெனத் தெரிவித்து ள்ளார்.  

மாறாக வர்த்தமானி அறிவிப்பை அமைச்சர் வெளியிடாத வரை தேர்தலு க்கான தயார்படுத்தல் உள்ளிட்ட முதற்படியை தம்மால் எடுத்துவைக்க முடி யாதெனத் தெரிவித்துள்ளார்.  

“எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பாக ஏற்றுக்கொ ள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெ ற்றது. 

உள்ளூராட்சிகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சரினால் அடுத்தவாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டால் ஜனவரி மாதத்தில் தேர்தலை நடத்தமுடியும் என்பதை இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

ஜனவரி மாத நடுப்பகுதியில் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக நாங்கள் கூறியுள்ளோம். எனினும் ஒவ்வொறு அரசியல்வாதிகளால் கூறப்பட்டுவரும் திகதிகளில் தேர்தலை நடத்த எம்மால் முடியாது என்பதை இச் சந்திப்பில் மிகத்தெளிவாக நாங்கள் தெரிவித்தோம். 

ஜனவரி மாதத்தில் தேர்தலை நடத்துவதாயின் எந்த திகதிக்குள் அமைச்சர் வர்த்தமானியை வெளியிட வேண்டுமென பலரும் எம்மிடம் கேட்கின்றனர். 

வாக்களிப்புக்களை எந்த இடையூறுகளும் இன்றி முழுமையான சுதந்திரத்து டன் நடத்துவதற்கு அதிகாரிகளை தயார்படுத்துவதாயின் அமைச்சர் நவம்பர் முதல்வாரத்தில் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட வேண்டுமென  எதிர்பா ர்க்கின்றோம். 

நவம்பர் இரண்டாவது அல்லது 3ஆவது வாரத்தில் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகினால் அதிகாரிகளை தயார்படுத்தல், பயிற்றுவிக்கும் செயற்பாடு களை செய்ய சிரமம் ஏற்படும். அதனால் நவம்பர் மாத முதல்வாரத்தில் வர்த்த மானி அறிவிப்பு வெளியாகுமென  எதிர்பார்க்கின்றோம். 

இருப்பினும் அதற்கடுத்த வாரங்களில் அறிவிப்பு வெளியாகினால் தேர்தல் நடத்த முடியும் என்றாலும், மக்களின் எதிர்பார்ப்பே முறியடிக்கப்படும். தேர்த லுக்கு உத்தரவிடும் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரது அதிகாரம் சட்ட த்தில் திருத்தம்செய்து ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டால் தேர்தலை நாங்கள் நடத்துவது இலகுவானது. எனினும் இப்படி செய்ய முடியாது.

சம்பந்தப்பட்ட அமைச்சர் வர்த்தமானி அறிவிப்பை விடுக்கும்வரை தேர்தலு க்குச் செல்ல முடியாது” என்றார்.