காவல்துறையினர் மீது போதைப்பொருள் கடத்தலில் குற்றச்சாட்டு – மாவை சேனாதிராஜா!
சிறிலங்கா காவல்துறையினருடன் பரிச்சயமானவர்களே போதைப் பொ ருள் கடத்தலில் செயற்படுவதால், அவர்கள் தொடர்பாக காவல்துறை யினர் எவ்வித நடவடிக்கையினை யும் மேற்கொள்வதில்லையென தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் மாவை சேனா திராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.
சூரியா அமைப்பின் ஏற்பாட்டில் சிங்களை மொழிக் கற்கையைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌவிக்கும் நிகழ்வில் கலந்து உரையா ற்றும்போதே மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
போருக்குப் பின்னர் வடமாகாணத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது. இதனால் எமது மாணவ சமுதாயம் போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டுள்ளது.
சில பேரினவாதச் சக்திகள் எமது சமுதாயத்தை திட்டமிட்டு அழிப்பதுடன் போதைப் பொருள் பாவனையால் எமது மண் அழிக்கப்பட்டுக் கொண்டிரு க்கின்றது.
மேலும் இந் நாட்டில் மது பாவனை அதிகமுள்ள இடமாகவும் யாழ் மண்ணே முன்னிலையில் காணப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் காலத்தில் எமது மண் ஒழுக்கமாகவும், கட்டுப்பாடாகவும் காணப்பட்டது.
ஆனால் அவர்கள் இன்று இல்லையென்பதால் எமது மண் சிதைக்கப்பட்டு மாணவ சமுதாயம் போதை மற்றும் மதுவுக்கு அடிமையாகி உள்ளமை காண ப்படுகின்றது.