Breaking News

யாழ்.மாநகர சபை வேலைத்தள மேற்பார்வையாளர் மீது தாக்குதல் !

யாழ்.மாநகர சபையின் வேலைத்தள மேற்பார்வையாளர் மீது ஆட்டோவில் வந்த இனந்தெரியாத நபர்கள் மூர்க்கத்த னமான தாக்குதலை தொடுத்துவிட்டு  தப்பித்துள்ளனர். இத் தாக்குதல் சம்பவ த்தில் காயமடைந்த மேற்பார்வையா ளர் கிசிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச் சம்பவம் தொடர்பாக மேலும் !

நேற்று முன்தினம் பருத்தித்துறை வீதி யமுனா ஏரிப் பகுதியிலுள்ள வாய்க்கா லை சுத்தப்படுத்தும் பணியில் யாழ்.மாநகர சபை ஊழியர்கள் செயற்பட்டி ருந்தனர்.  இவ் வேலைத்திட்டத்தினை மேற்பார்வை செய்வதற்கு ஆணையா ளரினால் உத்தியோகஸ்தர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். 

குறித்த வாய்க்கால் துப்புரவு செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை அங்கு 6 ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆட்டோவில் வந்துள்ளனர். 

அங்கு வந்த அவர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த நபரை அழைத்து, அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னர் ஆட்டோவில் வந்தவர்கள் மேற்பார்வையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

அவர்களிடம் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட மேற்பார்வையாளரை ஆட்டோ வில் வந்த மேலும் சில நபர்களும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று ள்ளனர். 

இச் சம்பவம் தொடர்பாக யாழ்.மாநகர ஆணையாளருக்கு தாக்குதலுக்குள்ளா க்கப்பட்ட மேற்பார்வையாளரினால் முறைப்பாடு செய்யப்பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.  

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை யாழ். மாநகர ஆணையாளர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.