Breaking News

கல்விமான்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி.!

நாட்டின் சவால்களை வெற்றி கொள்வதற்கு தமது அறிவு மற்றும் அனுபவங்களுடன் கூட்டு நிகழ்ச்சித் திட்டமொன்றுடன் இணையுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனைத்து கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுத்து ள்ளார். 

நேற்று பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற 'ஸ்ரீ ஜய வர்தனபுர பிரதீப பிரணாம' விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்று ம்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்கு கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணி இன்று எவ்வளவு தூரம் நிறைவேற்றப்படுகிறது என்பது கேள்விக்கிடமாகவுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அனைத்துப் பொறுப்புக்களும் அரசியல்வாதிகளிடம் மட்டும் விட்டுவிடப்படுவதாக சமூக த்தில் நிலவும் பிழையான கருத்து விரைவில் சரி செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

ஒரு நாட்டின் முன்னேற்றப் பயணத்தில் கல்விமான்கள் மற்றும் புத்தி ஜீவி களின் குரல் அத்தியாவசியமானதாகும் என்பதுடன், அவர்கள் தாமத மின்றி தமது பொறுப்புக்களை நிறைவேற்ற முன்வர வேண்டுமென ஜனாதிபதி அவ ர்கள் கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுத்தார். 

இனப்பிரச்சினையிலும், நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டத்திலும் சிறந்ததோர் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு கல்விமான்களும் புத்திஜீவிகளும் பக்கசார்ப ற்ற வகையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டு மெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஏனைய சமூக பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவர்களது அறிவு மற்றும் அனுபவம் மிகவும் முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்டார். 

எமது நாடு கல்விமான்களை உருவாக்குவதில் எந்த வகையிலும் பின் நிற்காத போதும், நாடு குறித்து சிந்திக்காது கல்விமான்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வது அபிவிருத்தி நடவடிக்கைகளில் பாரிய சவா லாக மாறியிருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல்வாதிகள் என்ற வகை யில் அதற்குத் தீர்வு வழங்க முற்படுகையில் அதனை அரசியல் சார்பானது என சிலர் அடையாளப்படுத்த முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார். 

எவ்வாறானபோதும் கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் தாய் நாட்டுக்காக தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கான தருணம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். 

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தில் இருந்து உருவான திறமை வாய்ந்த வர்களை பாராட்டுவதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் 42 பேர்க ளுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.