Breaking News

மாவீரர்களை நினைவுகூர அனைவரும் தயாராகுவோம் மாவீரர் பணிக்குழு அழைப்பு !

தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை உவந்தளித்த மாவீர ர்களை நினைவுகூர்வதற்கு எதிர்வரும் 27ஆம் நாள் அனைத்து மக்களையும் தயாராகுமாறு கிளிநொச்சி மாவட்ட மாவீரர் பணிக்குழு அழைப்பாணை விடு த்துள்ளது. 

கிளிநொச்சி மாவீரர் பணிக்குழுவின்  சந்திப்பு கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக இடம்பெற்ற வேளை மாவீ ரர் பணிக்குழுவின் தலைவர் பசுப திப்பிள்ளை தெரியப்படுத்தியதாவது -

தாம் வாழவேண்டிய வயதில் தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்க ளை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 27ஆம் நாள் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் மக்கள் மிகவும் எழுச்சியுடன் அனுட்டிக்கப்ப டுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அந்த வகையில் இவ்வருடம் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களில் மாவீரர் தினத்தை அனுட்டிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.


2008ஆம் ஆண்டின் பின்னர் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் மாவீரர் தின த்தினம் துயிலுமில்லங்களில் அனு ட்டிக்கப்படாதவாறு சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்து வைத்தி ருந்த நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் சில துயிலுமில்லங்கள் விடு விக்கப்பட்டு இராணுவக் கண்காணி ப்பில் உள்ளது. இருப்பினும், நாம் அனைத்துத் தடைகளையும் மீறி மாவீரர் துயிலுமில்லங்களில் எமது பிள்ளைகளை நினைவு கூர்ந்தோம். அந்த வகையி ல், இவ் வருடமும் அனுட்டிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என வும், எதிர்வரும் 27ஆம் நாள் அரசியலுக்கப்பால் கட்சி பேதங்களை மறந்து நாமனைவரும் உணர்வுள்ள தமிழர்கள் என்ற ரீதியில் செயற்படத் தயாராகு வோமெனக்  கேட்டுக்கொண்டுள்ளார்.