Breaking News

“பிரபாகரனது ஆசை நிறைவேறியதாக“ அரசியல் தீர்வை குழப்ப சதியாம் - சாந்தி சிறிஸ்கந்த

தென்பகுதியில் பிரபாகரனது ஆசை நிறைவேறியுள்ளதாகவும் தமிழீழம் கிடைக்கப்போகின்றதென  பொய் பிர ச்சாரம் செய்து அரசியல் தீர்வை குழப்ப சதி நடைபெறுவதாக பாராளு மன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்த ராஜா குற்றம் சுமத்தியுள்ளார்

மல்லாவி பிரதேச வைத்தியசாலை யை ஆதார வைத்தியசாலையாக தர முயர்த்தும் நிகழ்வில் கலந்து உரை யாற்றுகையில்  மேற்குறிப்பிட்டவாறு  பகிரங்கப்படுத்தியுள்ளார்.  பிரபாகரனது ஆசை நிறைவேற்றம் தமிழீழம் கிடைக்கப்போகிறதென  பிரச்சாரம் செய்கி ன்றார்கள். 

வடபகுதியிலுள்ள ஒரு சில சுயலாபம் கருதுகின்றவர்கள் இவ் அரசியல் யா ப்பிலே எதுவிதமான தீர்வுமில்லை எனவும் கூட்டமைப்பு முற்றுமுழுதாக தமிழ் மக்களை மோசம் செய்துள்ளதாக பிரச்சாரம் தொடுக்கின்றார்கள்.

இப்படியாக  மக்களை குழப்புகின்ற வகையிலே இடம்பெறும் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும். புத்திஜீவிகள் உண்மை எது சாத்தியமானது எது என்ப தை உணர்ந்து செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். 

மேலும், வெண்ணை திரண்டுவரும் போது தாழி உடைந்த கதையாக பல சம்பவங்களை நாங்கள் அறிவோம். இவ்வாறான இச் சந்தர்ப்பத்தை நாம் தவற விடாது எமது மக்களுக்கு நிம்மதியையும் விடிவையும் தேடிக்கொடுக்கின்ற வகையில் அனைவரும் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டுமென கோரி க்கை விடுத்துள்ளார்.