Breaking News

மத்­திய மாகா­ணத்­திற்­கான அதி­வேக நெடுஞ்­சாலை

அமைச்­ச­ர­வையில் கடும் வாக்­கு­வாதம் 

மத்­திய மாகா­ணத்­திற்­கான அதி­வேக நெடுஞ்­சாலை அமைப்­ப­தற்­கான ஒப்­பந்தம் தொடர்பில் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கடும் வாக்­கு­வாதம் இடம்­ பெற்­றுள்­ளது. ஐக்­கிய தேசி­யக்­கட்சி அமைச்­சர்­க­ளுக்கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி அமைச்­சர்­க­ளுக்­கு­மி­டை­யி­லேயே 40 நிமிடம் வரையில் வாதப்­பி­ர­தி­வாதம் இடம்­பெற்­றுள்­ளது. 
 ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அமைச்­ச­ர­வைக்­கூட்டம் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்­றது. இதன்­போது மத்­திய மாகா­ணத்­திற்­கான நெடுஞ்­சாலை அமைக்கும் விடயம் தொடர்பில் ஆரா­யப்­பட்­டது. 
நெடுஞ்­சா­லைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்­லவின் செயற்­பாடு தொடர்­பிலும் நெடுஞ்­சாலை அமைப்­ப­தற்­கான ஜப்பான் நிறு­வ­னத்­து­ட­னான ஒப்­பந்தம் குறித்தும் சுதந்­தி­ரக்­கட்­சியின் அமைச்­சர்­க­ளான தயா­சிறி ஜய­சே­கர, சுசில் பிரே­ம­ஜ­யந்த, மற்றும் சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் கடும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்­ளனர். 

இங்கு கருத்துத் தெரி­வித்த அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அபி­வி­ருத்திப் பணி­களை மேற்­கொண்டார். அதனை மறுக்க முடி­யாது. 

அவர் அபி­வி­ருத்தி பணி­களை செய்­ய­வில்லை என்று கூற முடி­யாது. ஆனாலும் அபி­வி­ருத்­தி­யுடன் இணைந்து பெரும் ஊழல்­களை அவர் மேற்­கொண்டார். அதே­போன்ற நிலைமை தற்­போது தொடர்­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது என்று கடும் தொனியில் கூறி­யுள்ளார். 

இதே­போன்றே அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, சுசில் பிரேம ஜயந்த ஆகி­யோ ரும் விமர்­சித்­துள்­ளனர். மத்­திய மாகா­ணத்­திற்­கான அதி­வேக நெடுஞ் ­சாலை ஒப்­பந்த விவ­கா­ரத்தில் ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன என்றும் இந்த அமைச்­சர்கள் குற்றம் சாட்­டி­யுள்­ளனர். 

இதன்­போது கருத்துத் தெரி­வித்த நெடுஞ்­சா­லைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல ஜப்­பா­னிய நிறு­வனம் ஒன்று இந்த நெடுஞ்­சாலை அமைக்கும் பணி­யினை பொறுப்­பேற்­றி­ருக்­கி­றது. 

பிர­தமர் ஜப்­பா­னுக்கு விஜயம் மேற்­கொண்­ட­போது இதற்­கான முடிவு எடுக்­கப்­பட்­டது. மத்­திய மாகாண நெடுஞ்­சா­லைக்கு ஜப்பான் நிதி உதவி செய்­வதால் அந்த நாட்டின் நிறு­வ­னத்­திற்கே இதற்­கான ஒப்­பந்­தத்தைக் கொடுக்­க­வேண்­டி­யுள்­ளது என்று விளக்­கி­யுள்ளார். 

ஆனாலும் இந்த ஒப்­பந்தம் ஜப்­பானின் தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்­காக அல்­லது அர­சாங்­கத்­திற்கா வழங்­கப்­பட்­டுள்­ளது என்றும் சுதந்­தி­ரக்­கட்சி அமைச்­சர்கள் கேள்வி எழுப்­பி­யுள்­ளனர். 

இதன்­போது அமைச்­சர்­க­ளான
சாகல ரட்­னா­யக்க, மலிக் சம­ர­விக்­கி­ரம ஆகியோர் நெடுஞ்­சா­லைகள் அமை ச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்­ல ­விற்கு ஆத­ர­வாக குரல் எழுப்­பி­யுள்­ளனர். சுமார் 40 நிமி­ட­நேரம் இரு தரப்பு  அமைச்­சர்­களும் நெடுஞ்­சா­லைகள் விவ­காரம் தொடர்பில் கடும் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். 

இத­னை­ய­டுத்து இந்த விட­யத்தில் தலை­யிட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மத்­திய மாகா­ணத்­திற்­கான அதி­வேக நெடுஞ்­சாலை அமைக்கும் பணி­யினை நிறுத்த முடி­யாது. 

ஆனாலும் அமைச்­சர்­களின் குற்றச்சாட்டுக்கள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 
எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியவுடன் இவ்விடயம் தொடர்பில் விசேடமாக கலந்துரையாடுவது என்றும் இந்த ஒப்பந்தம் தொட ர்பான முழுமையான விபரங்களை அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.