அரியாலை இளைஞன் படுகொலை, மண்டைதீவு கடற்படை முகாமில் சோதனை !
கடந்த வாரம் இனந்தெரியாதோரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் தொடர்பாக கிடைத்த இரக சிய கசிவையடுத்து, நீதிமன்றத்தின் அனுமதியுடன் நேற்று மாலை 6 மணி யளவில் மண்டைதீவு கோத்தாபய இராணுவமுகாம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மண்டைதீவு இராணுவமுகாமில் தரித்து நின்றதன் அடிப்படையிலேயே அங்கு தேடுதல் நடவடிக்கை முன்னெ டுக்கப்பட்டுள்ளதாகும். மண்டைதீவு கோத்தாபய இராணுவ முகாமில் கொ லைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் தரித்திருப்பதாக கிடைத்த தகவலை யடுத்து நேற்று மாலை யாழ். மேல் நீதிமன்றத்தில் இராணுவ முகாமைச் சோதனையிடுவதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தின் அனுமதியைடுத்தே இத்தேடுதல் வேட்டை நடைபெற்றதா கவும், இருப்பினும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் இதுவரை கைப்பற்றப்படவில்லையெனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இக்கொலையுடன் கடற்படையைச் சேர்ந்த புலனாய்வாளர்களுக்கு தொடர்பி ருக்கலாமென காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். இருப்பினும், கொலை யாளிகளை நெருங்கி விட்டதாகவும், அவர்கள் விரைவில் கையகப்படுவர் என மூத்த காவல்துறை மா அதிபர் ரொசான்பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.