Breaking News

தேர்தலை எதிர்கொள்ளமுடியாத நிலையாம் – ஜனாதிபதிக்கு !

அரசாங்கத்துக்கு தேர்தலை எதிர்கொ ள்ள முடியாத நிலை அமைந்துள்ள தாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்தி ரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக  கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி தெரிவித்துள்ளது. 

அண்மையில் இடம்பெற்ற நாடாளு மன்ற அமர்வில், நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாகவும் இறு தியாக நடைபெற்ற அமைச்சரவை அமர்வில் கருத்து வெளியிட்டுள்ளதாக வும் அவ்வூடகம் அறிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாக அமைச்சரவை யில் இரண்டாவது தடவையாகவும் வாதப் பிரதிவாதகங்கள் நடைபெற்று ள்ளதுடன், இதற்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டதா கவும்  தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறான பின்னணியிலேயே தே ர்தலை எதிர்கொள்ளமுடியாத நிலை அரசாங்கத்துக்கு அமைந்துள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டி யுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.