Breaking News

புதிய அர­சி­ய­ல் யாப்பினை உரு­வாக்­கு­வதில்........

நிறை­வேற்று ஜனாதிபதி முறைமை தொடர்பில் மைத்திரிபால நிலைப்­பாட்டை அறி­விக்க வேண்டும். 
(ரொபட் அன்­டனி) 

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டா­விடின் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வரு­வதில் அர்த்­த­மில்லை. தற்­போது ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை நீக்கக் கூடாது என கூறி வரு­கி­றது. 

இது தொடர்பில் தமது நிலைப்­பாட்டை ஜனா­தி­பதி உட­ன­டி­யாக நாட்டு மக்­க­ளுக்கு அறி­விக்க வேண்டும் என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சார செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜத்த ஹேரத் தெரி­வித்தார். ஜனா­தி­பதி தனது நிலைப்­பாட்டை அறி­விக்­கா­விடின் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதில் பாரிய சிக்கல் ஏற்­படும். 

நிறை­வேற்ற அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை இங்கு பிர­தா­ன­மா­னது என்­பதை அனை­வரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சியல் தீர்­வா­னது மாகாண சபை முறை­மையை அடிப்­ப­டை­யாகக் கொ ண்டு உரு­வாக்­கப்­ப­டு­மானால் ஜனா­தி­பதி முறைமை அவ­சி­ய­மில்லை. 

மாகாண சபை­களை கட்­டுப்­ப­டுத்தும் அதி­காரம் பாரா­ளு­மன்­றத்­திற்கு இருந்தா ல் போது­மா­னது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். 

அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொடர்­பான இடைக்­கால அறிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதன் அடுத்த கட்டம் தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிரச்­சார செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜத்த ஹேரத் இந்த விட­யத்தை குறிப்­பிட்டார். 

அவர் இது குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில், நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை முற்­றாக ஒழிக்­கக்­கூ­டாது என ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி கடு­மை­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றது. 

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே காணப்­ப­டு­கிறார். 

அந்த வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக நீக்­கு­வ­தாக கூறியே பத­விக்கு வந்தார். 

எனவே அவர் ஜனா­தி­பதி தேர்­தலின் போது குறிப்­பிட்­ட­வாறு தற்­போது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக நீக்க வேண்டும் என்­ப­துடன் அத­னூ­டா­கவே புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வர வேண்டும். 

ஆனால் தற்­போது சுதந்­திரக் கட்சி நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜன­தி­பதி முறைமை வேண்டும் என்று கூறு­வதால் ஜனா­தி­பதி அது தொடர்­பான நிலைப்­பாட்டை உட­ன­டி­யாக வெ ளியிட வேண்­டிய தேவை காணப்­ப­டு­கி­றது. 

கட்­சியை காரணம் காட்டி ஜனா­தி­பதி இந்த விட­யத்­தி­லி­ருந்து தப்­பித்துக் கொள்ள முடி­யாது. நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை தொடர்பில் ஜனா­தி­பதி தனது தற்­போ­தைய நிலைப்­பாட்டை உட­ன­டி­யாக வெ ளியிட வேண்டும். 

அதா­வது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை மாற்­றி­ய­மைக்­காமல் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வரு­வதில் அர்த்­த­மில்லை. மாகாண சபை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தீர்வுத் திட்­டத்தை வழங்­கு­வ­தனால் ஜனா­தி­பதி முறைமை அவ­சியம் தேவை என்று யாரும் கருத வேண்­டிய அவ­சி­ய­மில்லை. 

மாறாக மாகாண சபைகள் எல்லை மீறும் பட்­சத்தில் பாரா­ளு­மன்­றத்­தினால் அதனைக் கட்­டுப்­ப­டுத்த முடியும். அதனால் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வதில் எந்த சிக்­கலும் ஏற்படாது. 

ஆகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீ்க்கம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை சாட்டிக் கொண்டிருக்காமல் உடனடியாக தமது நிலைப்பாட்டை வெளியிட முன்வர வேண்டும். 

இல்லா விடின் புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதில் பாரிய சிக்கல் நிலை ஏற்படும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.