Breaking News

மைத்திரி முதுகில் குத்தியதாக புலப்புகின்றாராம் - சிவாஜிலிங்கம்

உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசி யல் கைதிகளின் வழக்கினை வவு னியா நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன முதுகில் குத்தியதாக  ரெலோ அமை ப்பின் சிவாஜிலிங்கம் தரப்பினர் சந்தே கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது. 

அரசியல் கைதிகள் தொடர்பாக இரண்டு நாட்களுக்குள் சாதகமான முடி வினை மைத்திரிபால சிறிசேன அறிவிப்பார் என ஆளுநர் றெஜினோல்ட் கூரே ஊடாக சிவாஜிலிங்கத்திற்குத் தெரியப்படுத்தியதாகவும், உண்ணா விரதமிரு க்கும் அரசியல் கைதிகளின் போராட்டத்தை நிறைவுசெய்து வைத்துவிட்டு ஊடகங்களுக்குத் தெரிவிப்பதாக சிவாஜிலிங்கம் பகிரங்கமாக தெரிவித்து ள்ளார்.

இன்று இரண்டாவது நாள் நடைபெறும் நிலையில் மைத்திரிபால சிறிசேன விடமிருந்து எந்தவித சாதகமான பதிலும் கிடைக்காத நிலையில், குறித்த அரசியல் கைதிகளின் உறவுகளுடன் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் கணேசன் வேலாயுதம் ஆகியோர் மேன்முறையீடு செய்வதற்காக சிரேஸ்ட சட்டத்தரணியை  நாடியுள்ளார். 

சிவாஜிலிங்கத்தின் கோரிக்கையை குறித்த சட்டத்தரணி நிராகரித்துள்ளதா கவும், குறித்த கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு அமைப்பு க்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்திவரும் நிலையில் அதனைக் குழப்பும் விதமாக சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக முடிவெடுத்து செயற்படுவதாகவும் அச்சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.