ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: தெஹிவளை பகுதியிலேயே ஐந்து பேரை கடத்தினோம்
முதலாம், இரண்டாம் சந்தேக நபர்களின் கீழ் சேவையாற்றிய மூவர்
தெஹிவளை பகுதியில் வைத்தே கடந்த 2008.09.17 அன்று ஐந்து பேரை தாம் உள்ளிட்டோரே கடத்தியதாக வும், லெப்டினன்ட் கொமாண்டர் ஹெ ட்டி ஆராச்சியின் தலைமையி லேயே அந்த நடவடிக்கை இடம்பெற்றதா கவும் கடற்படை வீரர்கள் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளித்துள்ளனர். அத்துடன் இவ்வாறு கடத்தப்பட்டோரை கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப் போது இருந்த லெப்டி னன்ட் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்கவிடம் ஒப்படைத்ததாகவும் அவர்கள் அவ்வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைவிட கடத்தப்பட்ட பலர் குறித்த கன்சைட் இரகசிய வதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பிலும் மற்றொரு கடற்படை வீரர் சி.ஐ.டி. விசேட விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையிலான அகுழுவினரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நேற்று கோட்டை நீதிவானுக்கு அறிவித்து அறிக்கை சமர்பித்தார்.
இதனைவிட விசாரணைக்கு தேவையான பல இரகசிய ஆவணங்களுட்டவற்றை கடற்படை தொடர்ந்து குற்றப் புலனயவுப் பிரிவுக்கு வழங்க மறுத்துவருவதாக விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா சுட்டிக்காட்டியதையடுத்து, குற்றவியல் சட்டத்தின் 124 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக அந்த அத்தனை ஆவணங்களையும் சி.ஐ.டி. யிடம் ஒப்படைக்க நீதிவான் லங்கா ஜயரத்ன கடற்படை தளபதிக்கு கட்ட ளையிட்டார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்க அஜயரத்ன முன்னிலையில் மீளவும் விசாரணைக்கு வந்தது.
இதன்போதே விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா வின் கோரிக்கையை ஏற்று இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன் இந்த விவகாரத்தில் தற்போது கைது செய்யப்படுவதற்காக தேட ப்பட்டு வரும் கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி யைக் கைது செய்ய பகிரங்க பிடியாணையும் நீதிமன்றில் நேற்று பிறப்பி க்கப்பட்டது.
முன்னாள் கடற்படை தளபதி, வசந்த கரண்ணாகொட தனது பாதுகப்பு உத்தியோகத்தராக இருந்த லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்கவுக்கு எதிராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த மேலதிக விசாரணைகளிலேயே இந்த கடத்தல் விவகாரம் அம்பலத்துக்கு வந்ததிருந்தது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் உத்தரவுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரட்னவின் ஆலோசனைக்கு அமைய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நாகஹமுல்லவின் வழிகாட்டலின் கீழ்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் புலனாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா தலைமையில் முன்னெடுக்கப்படும் இருவேறு விசாரணைகளில் இந்த பிரதான கடத்தல்கள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
கொழும்பு, கொட்டாஞ்சேனை, தெஹிவளை, வத்தளை மற்றும் கட்டுநாயக்க உள்ளிட்ட பல பிரதேசங்களில் பல்வேறு உத்திகளை கையாண்டு இந்த கடத்தல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக தெஹிவளையில் 2008.09.17 அன்று பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்பவரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாணவர்களும் கடத்தப்பட்டிருந்தனர்.
இதனைவிட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையை சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆராச்சி, திருகோணமலையை சேர்ந்த தியாகராஜா கஜன் உள்ளிட்டோரும் கடத்தப்பட்டிருந்தனர்.