நாடு திரும்பிய கோத்தா- கைது செய்யப்படவில்லையாம்....!
முன்னைய நாள் பாதுகாப்புச் செய லாளர் போத்தபாய ராஜபக்ஷ நா ட்டை வந்தடைந்துள்ளார். எவ்வாறா யினும் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச குறிப்பிடப்படுகின்றது. முன் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் அவர் விமான நிலையத்தில் வைத்து கைதாகலாமென அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. எவ்வாறாயினும் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாகவும், எனினும் அவர் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்க காலத்தில் மெதமுலன பிரதேசத்தில் டீ.ஏ. ராஜபக்ஷ அரு ங்காட்சியகம் மற்றும் நினைவகம் அமைக்கப்பட்ட போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதான விடயமாக கைதாகவுள்ளார். இத் திட்டத்தின் போது, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்த மான சுமார் 90 மில்லியன் ரூபா நிதி தவறாக பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர், கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட சம்பந்தப்பட சில தரப்பினரிடம் வாக்குமூலப் பதிவுகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.