ஜனாதிபதிக்கு சம்பந்தன் விரைவு கடிதம் - கைதிகள் தொடர்பாக
தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்ப ந்தன் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்தி ரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் சமர்ப்பித்துள்ளார். அதில் குறிப்பிட ப்பட்டிருப்பதாவது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளும் அச்சட்டத்தின் கீழே உள்ளனர். பயங்கரவாதத் தடைச்சட்டமானது மிகவும்கொ டூரமானதென உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் குடும்ப த்தினர் வருமான மற்று மிகவும் வறுமையில் வாடிவரும் நிலையில், சில வழக்குகள் வவுனியாவிலிருந்து அனுராதபுரத்தி ற்கு மாற்றியமை தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும்.