Breaking News

உறவுகளுக்கு பதில் வேண்டும் சிறிலங்கா அரசே – ஐரோப்பிய ஒன்றியம்!

காணாமல் போன உறவுகளின் நிலை மைக்கு என்ன நடந்தது ? எங்கே அவ ர்கள் என்ற கேள்விக்கு சிறிலங்கா அர சாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஜிஎஸ்பி வரிச் சலுகை தொடர்பாக சிறிலங்காவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் நிறை வேற்றப்பட்டுள்ளனவா என்பது தொட ர்பில் ஆராய்வதற்கு சிறிலங்கா வருகை தந்த ஐரோப்பிய நிபுணர் குழுவினர் நேற்று கிளிநொச்சியில் 200 நாட்களாக போராடும் காணாமல்போனோர் உறவுகளைச் சந்தித்துள்ளனர்.

 இதன்பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காப் பணியகத்தின் ருவிற்றர் பக்கத்தில் பதிவொன்று இடப்பட்டிருந்தது. அதில், ‘தமது அன்புக்குரியவர்க ளின் நிலை என்ன என்று, உறவினர்களுக்கு அரசாங்கம் அவசரமாக கூற வேண்டிய தேவை உள்ளது. தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 5 தாய்மார் இறந்துள்ளனர்’ என்பது குறிப்பிடத்தக்கது.


கடைசிவரை மகனைக் காணாது உயிரை விட்ட தாய் ....