அரசியல் யாப்பு சார்பாக அரசுடன் பேச்சைத் தொடுக்கவுள்ளதாக - இரா.சம்மந்தன்
புதிய அரசியல் யாப்பு விடயமாக தொ டர்ந்தும் அரசாங்கத்துடன் பேச்சுவா ர்தையை தொடர்வதற்கு ஆலோசி த்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவ ரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் குறி ப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவை இன்னொ ருமுறை அழைத்து ஆலோசனை செயற்படுத்தவுள்ளதாகவும் இலங்கைத் தமி ழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு ஒன்றுகூடல் கல்முனை ஜெயா திருமண மண்டபத்தில் நேற்றைய தினமான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.
இவ்வேளை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலை வருமான இரா.சம்மந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சிக் தலைவர் மாவை. சேனாதிராசா பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்த்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பின ர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
இவ் ஒன்று கூடலின் நிறைவடைந்த பின் மாலை 6 மணியளவில் ஊடக ங்களுக்கு செவ்விய வழங்குகையில் இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்த லில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவது தொடர்பில் முடிவுகள் எடுக்க ப்பட்டதா, என வினா தொடுக்கப்பட்தற்கு பதிலளித்த இரா. சம்பந்தன் அது சா ர்பாக முடிவுகள் எடுக்கவில்லையென்றார்.
பரிந்துரைகளுக்களுக்காக மக்களிடம் கலந்துரையாடுவோம் எமது கட்சி அங்க த்தவர்களிடமும், ஏனைய பேச வேண்டிய அனைவரிடமும் பேசுவோம், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இவ்விடயம் தொடர்பாக பேசும்.
இறுதியில் மக்களுடைய நன்மை கருதி தொடுக்கப்பட வேண்டிய தீர்மான ங்களை எடுப்போம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர சுடன் மட்டும்தான் பேச்சுவார்த்தைகளை நடாத்துகின்றது, என புதிதாக உதை யமாகியிருக்கின்ற தூய முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஓர் அமைப்பு தெரிவிப்ப தாக ஊடகவியாலாளர் கேள்வியைத் தொடுத்தார்கள்.
அது ஒருதப்பான அபிப்பிராயம் மர்கூம் அஸ்ரப்பின் காலம் தொடக்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அஸ்ரப் தலைமை தாங்கிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.
நீண்ட காலமாக இடம்பெற்ற இவ் விடயம், என்றாலும் அஸ்ரப் இறந்த பின்னர் நாங்கள் முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளோம்.
எவரையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை, எவரையும் நாங்கள் உதாசீனம் செய்யவில்லை எவருடனும் நாங்கள் பேசத்தயார். எல்லோரிடமும் நாங்கள் பேசி தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு நன்மை பயக்கக் கூடிய விடயங்களை ஒருமித்து எடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.