நல்லிணக்கத்திற்கு உதவுங்கள்: உலக நாடுகளிடம் மைத்திரி கோரிக்கை
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை உரை நிகழ்த்துகையில் போர்க்குற்றம், பொறுப்புக்கூறல் ம ற்றும் நல்லிணக்கம் தொடர்பான விட யத்தில் உடனடியாகச் செயற்பட முடி யாதெனவும் தாமதமாகவே நிறைவே ற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.
உரையில் தெரிவித்திருப்பதாவது, 30 வருட யுத்தத்தை எதிர்கொண்ட ஒரு நாட்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் வேகமாகச் செய்வதென்பது முடியாத செயல் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
நாடு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள், பிரேர ணைகள் தொடர்பாக ஒரு சமாதானம் மிக்க நாடென்ற ரீதியில் அமைதியான பயணத்தின் மூலம் தெளிவான இலக்கைத் தொட சர்வதே சதத்தின் ஒத்து ழைப்பை நல்குவதாக ஐ.நா பொதுச் சபையின் 72ஆவது கூட்ட த்தொடரில் விசேட உரையில் ஜனாதிபதி நிரூபித்துள்ளார்.
ஜனாதிபதி தனது உரையில் “யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு முன்னுரிமை அளித்து நாம் செயற்படுகின்றோம்.
யுத்தகாலத்தில் நிலவிய சூழ்நிலை தொடர்பாக முன்வைக்கப்பட்டிருக்கின்ற முன்மொழிவுகள் பற்றி அரசாங்கம் என்ற ரீதியில் முன்னுரிமை கொடுத்து செயற்படுவதோடு, அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளோம்.
30 ஆண்டு கால போருக்கு முகம்கொடுத்த நாட்டில் 2015ஆம் ஆண்டு தான் ஆட்சிக்கு வரும்போது முதன்மைப் பிரச்சினைகள் இரண்டு உள்ளன.
நிபந்தனையற்ற வெளிநாட்டுக் கடன்களை செலுத்த வேண்டிய நிலையில் பாரிய நிதிப்பற்றாக்குறை இருந்தமை முதலாவது பிரச்சினை அத்தோடு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் முன்வைக்க ப்பட்ட பிரேரணை இரண்டாவது சவால்கள். எனினும் குறிப்பான தேசிய பொருளாதரத்தை பலப்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதற்கும் வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதற்குமான செயற்பாடுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
பொருளாதார சுபீட்சத்தை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்தி ருக்கும் வேலைத்திட்டங்கள் ஊடாக வெளிநாட்டு கடன்களிலிருந்து விடுபடும் இலக்கை நோக்கி ஸ்ரீலங்கா நடைபயின்று கொண்டிருக்கின்றது.
பல்வேறு மொழி பேசும், மதங்களைப் பின்பற்றும் அனைவரிடமும் சகோ தரத்துவத்தைக் உருவாக்கி சந்தேகம், நம்பிக்கையீனம், பழிதீர்க்கும் உணர்வு மற்றும் துரோதத் தன்மை அற்று அனைவரும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியா கவும் சமத்துவமாகவும் வாழக்கூடிய சமூகத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் பாடுபடும். சட்டத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் நியாயமான சமூகத்தை உருவாக்கும் அடிப்படைச் செயற்பாட்டுக்காக அரசாங்கம் அர்ப்ப ணிப்புடன் செயற்படுகின்றது.
ஜனநாயகம் மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள் போன்றவற்றை பலப்படுத்தி சர்வதேசத்தின் நற்பெயரைப் பெற்றுக்கொண்டு விலகியிருந்த நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தி மிகச்சிறந்த அரசாட்சியை முன்னெடு க்கும் இந்நேரத்தில், எமது நாட்டைக் கட்டியெழுப்பி முன்னேற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.
62 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சமவாயங்கள் உடன்படிக்கைகள் ஒழுங்குவிதிகள் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயற்பட்டு வரும் ஸ்ரீல ங்கா, ஐ.நாவின் அனைத்துத் தீர்மானங்களுக்கும் உறுப்பு நாடென்ற ரீதியில் ஸ்ரீலங்கா அரசாங்கம் தன்னகத்தே செயற்பாடுகளை நிறைவேற்று வருகி ன்றது.
நாட்டின் சுயாதீனத் தன்மை மற்றும் இறைமை ஆகியவற்றை பாதுகாக்கும் அதேநேரம் நாடு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டு கள், பிரேரணைகள் தொடர்பில் ஒரு சமாதானம் மிக்க நாடென்ற வகையில் நிதானமான பயணத்தின் மூலம் தெளிவான இலக்கை எட்ட சர்வதேசதத்தின் ஒத்துழைப்பை நல்கின்றோம்.
சில கடும்போக்காளர் துரிதமான பயணத்தையும், தீர்வுகளையும் எதிர் நோக்குகின்றனர். 30 ஆண்டுகால போர் நிலவிய நாடென்ற வகையிலும், பிள வுகள் ஏற்பட்டிருந்த நாடென்ற வகையிலும், நட்டினுள் இன ஒற்றுமையை ஏற்படுத்தி சகோதரத்துவத்தை கட்டியெழுப்பி அன்புக்குரிய நாட்டையும் மக்களையும் மேம்படுத்துவதற்காக அனைவரினதும் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.
நிதானமாக நகரும் காத்திரமான பயணத்திற்காக அனைவரினதும் ஒத்துழை ப்பையும் தேவை. நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தி பாதுகாப்பதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் கடந்த இரண்டரை வருடங்களாக ஜனநாயக ரீதியிலான ஆட்சி முறையினை செயற்படுத்தியுள்ளது.
ஜனநாயகத்தை பாதுகாத்து போசிக்கும் நாடுகளில் ஆட்சிக்குவரும் தலைவர்கள், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் அதிகாரத்தை உரியவாறு பயன்படுத்துவதற்கும், நியாயமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக தமது அதிகாரத்தை பயன்படுத்துவது மிகவும் முக்கியத்துவமானது.
மேலும் கடந்த பல தசாப்தங்களாக உலக வரலாற்றை நோக்கும்போது பல தலைவர்கள் அதிகாரத்திலிருந்து பிரிந்து செல்ல விரும்பாமை காரணமாக அந் நாட்டின் சமாதானம் சீர்குலைவதுடன் அது சர்வதேச ரீதியிலான பல்வே று விதமான பிரிவுகளுக்கும் காரணமாக அமைந்ததைக் குறிப்பிடுகின்றது.
வரலாற்றுத் தகவல்கள் பற்றிய, உள்நாட்டு வெளிநாட்டு ஏராளமான அனுபவங்கள் எமக்குள்ளன.
அவ்வாறான நிலைமையில் எனது நாட்டில் ஜனநாயக்தை உறுதிப்படுத்தி ஏகாதிபத்திய அரசியலை கொண்டுநடத்திய அரசியல் குழுக்களை அகற்றி நாட்டில் மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயக்தையும் உறுதிப்படுத்தி, ஜனநாயகத்தை பாதுகாத்து அடிப்படை உரிமைகளை நிலை நாட்டியுள்ளேன்.
இலங்கையில் 30 ஆண்டுகளாக நிலவிய உள்நாட்டுப் போர், நாட்டின் பொரு ளாதாரத்தை சீர்குலைத்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நா ட்டைப் பிரிப்பதற்கான போராட்டத்தில் இருந்து நாட்டை பாதுகாக்க எம்மால் முடிந்துள்ளது.
எனது நாட்டு சனத்தொகையில் நூற்றுக்கு 52 வீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாவார். பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களுடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் 25 வீதமானோர் பெண்களாக இருக்க வேண்டுமென்பதனை எமது புதிய அரசியல் திருத்தச்சட்டத்தில் நிர்ப்பந்தித்துள்ளோம்.