ஜெனிவாவில் ஐ.நா கூட்டத் தொடருக்கு இலங்கை அமைச்சு குழு சமூகமளிக்காதாம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 29 ஆம் திகதிவரை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த முறை கூட்டத் தொடரில் இலங்கையிலிருந்து அமைச்சர்கள் மட்டக்குழு சமூகமளிக்கவில்லை எனக் தெரிவிக்கப்படுகின்றது.
மாற்றீடாக ஜெனிவாவிலுள்ள இலங்கை வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினரே 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பாக பங்கேற்கவுள்ளனர்.
திங்கட்கிழமை முதலாவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தலைவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரும் உரை நிகழ்த்துவார்கள்.
இக் கூட்டத் தொடரில் இலங்கையின் விவகாரங்கள் எதுவும் நிகழ்ச்சி நிரலில் தொடுக்கபடவில்லை. எனினும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இலங்கை தமது நேர உரைகளின்போது இலங்கை குறித்து கேள்வியைத் தொடுக்கலாமென நம்பிக்கையுள்ளது.
அதாவது ஜெனிவா அமர்வுகளின்போது பொதுவான விவாதங்களின்போது பல்வேறு தலைப்புக்களின் கீழ் உரையாற்றவுள்ள சர்வதேச அரச சார்பற்ற நிறு வனங்களின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பிலான கருத்துக்களை முன்வை க்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சர்வதேச மன்னிப்புச் சபை என்பன இலங்கை குறித்து கோரிக்களை கோரலாமெனவும் இதேவேளை சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் பல்வேறு உபகுழுக் கூட்டங்களை ஜெனிவா வளாக த்தில் முன்வைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமை குறி்த்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது. இலங்கையிலிருந்து சில பொது அமைப்புக்கள் இம்முறை ஜெனிவாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு உபகுழுக் கூட்டங்களில் அங்கம் வகிக்கவுள்ளனர்.
இதேவேளை இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட விஜயங்கள் தொடர்பில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆராயும் ஐ.நா. வின் விசேட குழுவானது ஒரு நீண்ட அறிக்கையை ஐ.நா. மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்துள்ளது.
இம்முறைக் கூட்டத் தொடரில் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பாக ஐ.நா.வின் விசேட செயற்குழுவின் அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பான ஒருசில விடயங்களை எடுத்துரைக்கப்படுமெனவும் கூறப்படுகின்றது.