பிரபாகரனின் வழிநடத்தல் இன்மையால் தேசப்பற்று இல்லையாம் – தேரர் !
மேதகு வேலுப்பிள்ளை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்க ளின் வழிநடத்தல் இன்மையால் சிங்கள மக்களுக்கு தேசப்பற்று அற்று ப்போய் விட்டதாக பெல்பொல விப ஸ்ஸி தேரர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்குறிப்பிட்டவாறு குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருக்க வேண்டும். அவர் இல்லாததால் சிங்கள மக்களுக்கு தேசப்பற்று இல்லாமல் போய்விட்டது. இன்றைய நிலையில் உயிருடன் இருந்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேர்மையானவர்களைத் தெரிவு செய்து ஆசனத்தில் அமர்த்தினால் நாடு உரிய இலக்கை அடையும். இன்று அவ்வாறான நிலமை அற்றுப்போய்விட்டது. மாநாயக்க தேரர்களையும், தலைவர்களையும் மோசமாக விமர்சனம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது சரியான நிலமையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.