வித்தியா கொலை குற்றவாளிகள் ஏழுபேருக்கு மரண தண்டனை தீர்ப்பாகியுள்ளது.!!
யாழ் புங்குடுதீவில் படுகொலையான மாணவி வித்தியா கொலைவழக்கில் இறுதித்தீர்ப்பு இன்று ஏழாம் இலக்க சந்தேகநபர்கள் தவிர்ந்த சுவிஸ்குமார் உட்பட 7 பேருக்கு ட்ரயல் அட்பார் நீதி மன்றம் சற்று முன்னர் மரண தண்டனை தீர்ப்பாக நீதிமன்று முடிவுரை த்துள்ளது.
2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்கு மார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4 ஆவது எதிரி மகாலிங்கம் சசிதரன், 5 ஆம் இலக்க எதிரி தில்லை நாதன் சந்திரதாசன், 6 ஆம் இலக்க எதிரி பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன், 8 ஆம் எதிரி ஜெயநாதன் கோகிலன், 9 ஆம் எதிரி சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் குறிப்பிடப்பட்டோருக்கு மரணதண்டனையாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,
புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியா வின் கூட்டுப் பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை நீதிபதி சசி மஹேந்திரன் தனது தீர்ப்பை முடிவு செய்து ள்ளார்.
நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பாயத்தின் தலைவரின் தீர்ப்பே தனது தீர்ப்பு என தெரிவித்தார். தற்போது யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்த நிலையில் புங்குடுதீவு மாணவி வழக்கின் தண்டனைத் தீர்ப்பு சற்று நேரத்தில் பகிரங்கப்படுத்தப்ப ட்டுள்ளது.
மேலும் 2ஆம் (பாலசிங்கம் ஜெயக்குமார்), 3ஆம் (பூபாலசிங்கம் தவக்குமார்), 5ஆம் (தில்லைநாதன் சந்திரகாசன்), 6ஆம் (சிவதேவன் துஷாந்த்) சந்தேக நபர்களே இந்த துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்து ள்ளது.
மேலும் வித்தியாவின் தாயார் வழங்கிய சாட்சியம், 13 வயது பாடசாலை மாணவன் வழங்கிய சாட்சியம் ஆகியவற்றையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு ள்ளது.
தீர்ப்பை எதிர்பார்த்து திறந்த நீதிமன்றில் பெரும் எண்ணிக்கையா மக்கள் அணி வகுத்து காணப்பட்ட்னர் என்பது குறிப்பிடத்தக்கது.