Breaking News

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டு - பாட்டலி சம்பிக்க ரணவக்க

விடுதலைப் புலிகளின் 30 வருட கால போரை முடிவிற்குள் கொண்டு வந்த இராணுவத்தினரை பொய்யான கு ற்றாச்சாட்டுகளினால் தண்டிக்க ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என நல்லாட்சி அரசாங்கத்தின் பங்கா ளி கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. 

மேலும் சர்வதேச நாடுகளில் விடுத லைப் புலிகளின் மீள இயக்கம் புலம்பெயர் அமைப்புக்களின் உதவியுடன் செயற்படுவதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தொடர்ந்தும் குற்றச்சாட்டுகளை பிரயோகித்துள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தேசிய கொள்கையிலிருந்து விலகி ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒரு போதும் பய ணிக்காது. ஸ்ரீலங்காவின் உள்ளக விவகாரங்களை அரசாங்கமே தீர்க்கும், அதற்கான தீர்வு நல்லாட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

தேசிய ஒன்றுமையை மாற்றவே சர்வதேச அமைப்புக்கள் தொடர்ந்தும் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன. இறுதிக்கட்ட யுத்ததில் யுத்த கால குற்றங்களில் இராணுவத்தினர் செயற்படவில்லையென உறுதி யாகத் தெரியப்படுத்தியுள்ளார். 

தனிப்பட்ட காரணங்களை நாம் எமது சட்டத்திற்கு அமைவாக விசாரித்து வருகின்றோம். நாட்டின் உள்விவகாரங்களை எமது நீதிமன்றங்களில் இல ங்கையின் சட்டத்திற்கு அமைவாகச் செயற்படுத்தவுள்ளோம். 

 எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 

இதை மாற்றியமைக்க யார் வந்தாலும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை. 

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த போதிலும் சர்வதேச ரீதியில் அவர்க ளின் செயற்பாடுகள் இன்னும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்றும் சர்வதேச நாடுகளில் விடுதலைப் புலிகளின் மீள இயக்கம் உள்ளதுடன் புலம்பெயர் அமைப்புக்களின் உதவியுடன் சர்வதேச அமைப்புக்களின் மூல மாக ஸ்ரீலங்காவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றும் ஐக்கிய நாடுகள் சபையிலும், சிவில் அமைப்புக்களின் மூலமாகவும் அவர்களின் குரலே ஒலித்த வண்ணமே உள்ளது. ஆகவே இவற்றை நாம் கவனத்தில் கொள்ளத் தேவையில்லையென் குறிப்பிட்டுள்ளார்.  

கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா மீது இருந்த நேரடி அழுத்தங்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் குறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரதமரின் சர்வதேச நட்புறவுகள் இன்று நாட்டை அழுத்தங்களிலிருந்து குறைத்துள்ளது. 

சில அழுத்தங்களுக்கு அஞ்சியோ அல்லது மாற்றுக் கொள்கையை உரு வாக்கும் நோக்கத்திலேயே எமது இராணுவத்தை தண்டிக்கும் எந்தவொரு வாய்ப்பையும் எம்மால்  கொடுக்க முடியாது. 

எமது பாதையை சர்வதேசத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க முடியாது. 

அவ்வாறு மாற்றியமைக்கப்பட்டால் அது நாட்டின் இறைமையில் பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும். ஆகவே அரசாங்கம் நாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லையென தெரியப்படுத்தியுள்ளார்.