லலித் வீரதுங்க மீது அரசியல் பழிவாங்கலாமா - மஹிந்த ராஜபக்ஷ
லலித் வீரதுங்கவுக்கு எதிராக தொடு க்கப்பட்ட தீர்ப்பானது அரசியல் பழிவாங்கல் எனது கட்டளைக்கு அமைய நடந்தமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரசாங்கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்க ள் சிலர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வதாகவும் குருணாகலையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வழங்கியபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், அரச அதிகாரிகள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். அரச கொள்கையின் அடிப்படையிலேயே சில் துணி வழங்கப்பட்டது. மாறாக தேர்தல் பிரச் சாரத்துக்காக வழங்கப்படவில்லை.
நாட்டின் அரசியலமைப்பில் பெளத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும், அதனை பாதுகாப்பாதற்கான பிரகாரமே விகாரைக்கு வருபவர்களுக்கு சில் ஆடை வழங்கி மதத்தை போஷிக்க எனது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது.
அரசாங்கத்தின் கொள்கையை நிறைவேற்றுமாறு அதிகாரிக்கு தெரிவிப்பது எனது கடமை. அதனையே லலித் வீரதுங்கவிடம் நான் தெரிவித்தேன். என்னால் வழங்கப்பட்ட உத்தரவை செயற்படுத்தியதனாலேயே அவர் கைது செய்யப்பட்டு இன்று சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
அவரின் கைதானது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதொன்றாகும்.
அத்துடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் அரசாங்கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
அதனால் அவர்களில் ஒரு பிரிவினர் எதிர்வரும் மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துகொள்வதாக அதற்கான உறுதியை அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.