கண்டி போகம்பர சிறைச்சாலைக்குச் சென்ற விக்னேஸ்வரன்
நேற்றைய தினம் கண்டி போகம்பர சிறைச்சாலைக்கு நேரடியாகச் சென்ற வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கைதிகளின் சுக துக்கங்களை கேட்டும் பார்த்தும் அறி ந்துள்ளபோது தமக்கு எதிரான வழ க்குகள் விரைவில் நடைபெறுமெனக் கூறப்பட்ட போதிலும் அவ்வாறு நடை பெறுவதில்லையென அவர்கள் தம்மி டம் தெரிவித்ததாக வட மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதன்பின்னர் ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியு றுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனைவிற்கு சில நாட்களுக்கு முன்னர் கடிதமொன்றை அனுப்பியிருந்ததாக தெரிவித்தார்.
ஆளுநருக்கு கடிதமொன்றை அனுப்பி இதற்கு என்ன செய்யலாம் என ஜனாதிபதி கேள்வி எழுப்பியதாகவும் ஆளுநர் வழங்கிய பதில் தமக்கு தெரியாதெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மிக விரைவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்குகள் முடிவுக்குள் வரவேண்டுமென சட்டமா அதிபர் திணைக்க ளத்திற்கு கடிதமொன்று அனுப்பட்டுள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடிதமொன்று அனுப்பட்டுள்ளதென தமக்கும் கூறப்பட்டதாக தடுத்து வைக்க ப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ் வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மீண்டும் அந்த வழக்கு நவம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டதாகவும் முத லமைச்சர் தெரிவித்துள்ளார்.
வழக்குகளை விரைவுபடுத்துமாறு கூறப்பட்டாலும் அது நடைபெறவில்லை அது குறித்து கவனம் எடுக்க வேண்டுமெனவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் தம்மால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் அரசாங்கமும் சட்டமா அதிபர் திணைக்களமும் ஜனாதிபதியுமே முடிவெடுக்க வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.