இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியவை நீதிமன்றத்தில் முற்படுத்த - பிரித்தானியா
தென்னிலங்கை ஊடகமான திவயின தகவலின்படி ஸ்ரீலங்காவின் முன்னா ள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை, சர்வதேச நீதிமன்றத்தி ல் முற்படுத்த பிரித்தானியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதனால் இன்ட ர்போல் பொலிஸார் ஊடாக கைது செய்ய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டு ள்ளது.
அச் செய்தியின்படி,
”ஜெகத் ஜெயசூரியவைக் கைதுசெய்யும் கோரிக்கையை பிரித்தானியாவின் அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழு அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
குறிப்பாக இலண்டனிலுள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கும் அந்நாட்டு பாராளுமன்ற குழு உறுப்பினர் ஒருவரே இக் கோரிக்கையை விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இக் கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலமே இலங்கையின் நல்லிணக்க செயற்பாட்டிற்கு வெற்றியளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
”சத்தியம் மற்றும் நீதியை தேடும்” என்ற அரச சார்பற்ற அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ் வழக்கில், உயிரிழந்த மற்றும் காணாமல் போன குடும்பங்களுக்கு நீதி கிடைக்குமென மேலும் குறிப்பிட்டுள்ளார்.” என்று அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.