மஹிந்தவிற்கு எதிராக விசாரணை ! ஜனாதிபதி
குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி யும் ஆன மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்திற்குள்ளான மோசடி, ஊழ ல்கள் தொடர்பான 17 அறிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடம் விரைவில் சமர்ப்பிக்கப்படவு ள்ளன.
விசாரணைகள் ஜனாதிபதியால் நிய மிக்கப்பட்ட குழுவே குறித்த அறி க்கைகளை சமர்ப்பிக்கவுள்ளன.
மேற்படி ஆணைக்குழுவிற்கு ஆயிரத்து 599 முறைப்பாடுகள் வசமாகியுள்ளன. 401 முறைப்பாடுகள் மட்டுமே இவ் ஆணை க்குழுவின் அதிகாரத்தின்படி உள்ளன.
எவ்.சி.ஐ.டி, இலஞ்ச ஊழல் ஆணை க்குழு ஆகியவற்றிற்கான அறிக்கைகள் அனுப்பி சமர்ப்பிக்கப்படவுள்ளன.
கொப்பேகடுவ ஆய்வு மையத்தில் நடைபெற்ற ஊழல் மோசடி, வடமத்திய மாகாணத்தில் கேள்விப்பத்திர விநியோகத்தில் நடைபெற்ற மோசடிகள் உள்ளிட்ட 17 அறிக்கைகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இவ் ஆணைக்குழுவின் ஆயுட்காலம் கடந்த 02ஆம் திகதியுடன், நிறை வடைந்துள்ள நிலையில், ஆணை க்குழு தலைவர் தொடர்ந்தும் 3 மாத ங்களுக்கு ஆணைக்குழுவின் கால த்தை நீடிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக குறிப்பிட ப்பட்டுள்ளது.