Breaking News

புதிய யாப்பு- தமிழரசுக் கட்சியின் விளக்கமளிக்கும் நிகழ்வு மக்களுக்கு முதலாவது தடவை !

புதிய யாப்புக்கான இடைக்கால அறி க்கை சார்பாக மக்களுக்கு விளக்கம ளிக்கும் முதலாவது கூட்டத்தை மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்வ தற்கு தமிழரசுக் கட்சி தயராகியுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது. விளக்க மளிக்கும் முதலாவது கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாடகவே மேற்கொண்டதாகவும் ஆனால் ஈபிஆா்எல்எப், புளொட், ரெ லோ ஆகிய கட்சிகள் அதற்கு உடன்படவில்லை எனவும் கட்சியின் மூத்த உறுப்பினர்  தெரிவித்துள்ளார்.  முதலாவது கூட்டத்திற்கு மன்னார் மவாட்ட த்திலுள்ள பொது அமைப்புகள், சமயத் தலைவர்கள் குறிப்பாக மன்னார் ஆயர் இல்லம் உட்பட அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரி விக்கப்படுகின்றது.  

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையில் இடம்பெறும் கூட்டத்தில் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன், உட்பட கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் விளக்கம் அளிக்கவுள்ளனர்.  

அதேவேளை இந்த விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவ தில்லையெனவும்  இடைக்கால அறிக்கை பயனற்றதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரியப்படுத்தியுள்ளார். 

இதேவேளை பயனற்ற இடைக்கால அறிக்கை குறித்து விவாதித்து நேரத்தை வீணடிப்பதை விட எதிர்வரும் காலங்களில் எவ்வாறான அரசியல் நகர்வு களை செயற்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டுமென புளொட் வட்டா ரங்கள் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.