Breaking News

தமிழ் பேரவையின் தலைவர் இமானுவேல் இலங்கையில் !

உல­கத்­த­மிழர் பேர­வை தலைவர் அரு ட்­தந்தை இமா­னு வேல் அடி­களார் நல் ­லெண்ண கருத்துக்களை வெளிப்­ப­டு த்தும் முக­மாக இலங்­கைக்கு வருகை தந்துள்ளார். ஆட்சியாளர் மைத்திரி பால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன, நிதியமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள், பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட முக்கிய நாடுகளின் இராஜ தந்திரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். தொடர்ந்து யாழ்ப்பாணம் சென்று சமூக, பொருளாதார நிலமைகளை நேரில் ஆராய்வதாகவும், பல்வே றுபட்ட உறுப்பினர்களையும் சந்தித்தவண்ணமுள்ளார். 

பயணம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையில், நான் எனது மக்­க­ளுக்­காக புலம்­பெ­யர்ந்த மண்ணில் குர­லெ­ழுப்பி பல்­வேறு செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்துள்ளேன். 

கடந்த காலங்­களில் எனக்கு இலங்­கைக்கு வரு­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்­தது. நான் இறு­தி­யாக சுனாமி அனர்த்தம் இடம்­பெற்­றி­ருந்த சம­யத்­தி­லேயே இலங்­கைக்கு வரு­கை­தந்­தி­ருந்தேன். தற்­போது ஆட்சி மாற்றம் இடம்­பெற்­றது. 

புதிய ஆட்­சி­யா­ளர்­களின் எமக்கு தெரி­வித்த உறு­தி­மொ­ழிகள் தொடர்­பில நாம் தீவி­ர­மாக ஆராய்ந்தோம். அவர்­க­ளி­டத்தில் கடந்த கால அர­சாங்­கங்­க­ளி­டத்­தி­லி­ருந்து முன்­னேற்­ற­க­ர­மா­ன­தொரு சிந்­த­னையும் தமிழ் மக்கள் தொடர்­பான ஆழ­மா­ன­தொரு கரி­ச­னையும் இருப்­பதை கண்டறிந்தோம். 

அத்­துடன் இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச நாடுகள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரி­டத்­திலும் வழங்­கிய உறு­தி­மொ­ழி­க­ளையும் அவ­தா­னித்தோம். அதன் பின்னர் அவர்கள் எம்­மு­டனும் (உல­கத்­த­மிழர் பேர­வை­யு­டனும்) பேச்­சு­வார்த்­த­களை தொடுத்துள்ளனர்.

இரண்டு சந்­தர்ப்­பங்­களில் அப்­போ­தி­ருந்த வௌிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர எம்மை இலங்­கைக்கு வருகை தரு­மான அழைப்­பினை விடுத்­தி­ரு ந்தார். 

குறிப்­பாக நாம் அர­சாங்­கத்தின் முற்­போக்­கான செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ர­வினை வழங்கி வரு­வ­தோடு தேயைான இடங்­களில் எமது சுட்­டிக்­காட்­டு­தல்­க­ளையும் செயற்படுத்தி வருகின்றோம். 

அவ்­வ­கையில் இறு­தி­யாக நடை­பெற்­றி­ருந்த வௌ்ளப் பெருக்கு மண்­ச­ரிவு அனர்த்­தத்தின் போது நாம் 18இற்கும் அதி­க­மான வைத்­தி­யர்­களை அவ­ர­ச­சி­கிச்­சை­களை வழங்­கு­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு உத­வி­ய­ளிப்­ப­தற்­காக அனுப்­பி­வைத்­தி­ருந்தோம். 

இந்­நி­லை­யி­லேயே நான் அர­சாங்­கத்தின் அழைப்­பினை ஏற்­றுக்­கொண்டும் நல்­லெண்ண சமிக்­ஞையை வௌிப்­ப­டுத்தும் வகை­யிலும் தற்­போது அர­சியல், பொரு­ள­தார ரீதி­யாக காணப்­ப­டு­கின்­ற கடு­மை­யா­ன­தொரு சூழலை நேரில் ஆராய்­வ­தற்­கு­மா­கவும் இலங்­கையை வந்தடைந்துள்ளேன். 

சில தினங்­க­ளாக கொழும்பில் தங்­கி­யி­ருந்­த­போது பல்­வேறு தரப்­பி­னர்­க­ளை யும் சந்­தித்­தி­ருந்தேன். இருப்­பினும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­ந­யக்கா, இந்­திய உயர்ஸ்­தா­னிகர் ஆகி­யோரைச் சந்திப்பதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. விரைவில் அவர்களையும் சந்திப்பேன். 

தற்போது எனது தாயக பூமியல் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கியிருந்து இங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றேன். இங்கும் பலதரப்பட்ட மக்களை எனது உறவிர்களையெல்லாம் நாள்தோறும் சந்தித்து கலந்துரை யாடிய வண்ணமுள்ளேன். 

எமது மக்களின் எதிர்காலம் தொடர்பான சிறந்த திட்டமிடலுக்கு இது வலு வானதாக அமையுமென குறிப்பிட்டுள்ளார்.