வித்தியா வழக்கில் 7 பேரின் குற்றம் உறுதியாகியது - தொடுநர் தரப்பு
மாணவி வித்தியா கொலை வழக்கு 7 பேரின் குற்றத்தை வழக்கு தொடுநர் தரப்பு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை கள் ட்ரயல் அட்பார் முறையில் நடை பெற்று வருகின்றது.
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படு கொலை தொடர்பான வழக்கின் எதிரி தரப்பின் தொகுப்புரைகள் இன்று தீர்ப்பாயம் முன்னிலையில் ஆரம்பமாகியது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 எதிரிகளில் முதலாம் ஏழாம் எதிரிகளுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லையெனவும் ஏனைய ஏழு பேருக்கு எதிராகவும் சாட்டப்பட்ட குற்றங்கள் சந்தேகத்துக்கிடமில்லாத வகையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வழக்கு தொடுநர் தரப்பில் குறிப்பி டப்பட்டுள்ளது.
9 எதிரிகளுக்கு எதிராகவும் 41 குற்றச்சாட்டுக்கள் சட்டமா அதிபர் திணை க்களத்தால் சமர்ப்பிக்கப்பட்டது. வித்தியாவை கடத்துவதற்கு சதித்தி ட்டம் தீட்டியது, கடத்தியது, பலாத்காரம் செய்தது மற்றும் கொலை உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கும் வகையில் வழக்கு தொடுநர் தரப்பால் சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
அதே போல் எதிரிகள் தரப்பு சாட்சியங்களும் முன்வைக்கப்பட்டு அனைத்து சாட்சியப்பதிவுகளும் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் வழக்கு தொடுநர் தரப்பிலான தொகுப்புரை தொகுக்கப்பெற்றது.
வழக்கு தொடுநர் தரப்பு பிரதி மன்ற நிதிபதி ப.குமாரரட்ணம், தனது தொகுப்பு ரையில் தெரிவிக்கையில்.
1,7 ஆம் எதிரிகளுக்கு எதிராக போதிய சாட்சிய ங்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்வதுடன், 2,3,4,5,6,8,9 ஆம் எதிரிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனை த்தும் எவ்வித சந்தேகத்துக்கும் அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்த்தரப்பு தொகுப்புரை நாளை இடம்பெறும் அதுவரை எதிரிகள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.