ஆயுதப் போராட்ட பின்னடைவு ஏன் - எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா
இராஜ தந்திர முறையை பாதுகாக்கத் தவறியமையே தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோல்வியடைய காரண மென வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார். உலகிலே சிறந்த ஆயுதப் போராட்ட த்தை முன்னெடுத்தவர்கள் என உலக நாடுகளினால் பெருமையாக விமர்சி க்கப்பட்ட தமிழர்கள் இந்த போராட்டங்களினால் எதனை பெற்றுக்கொண்டா ர்கள் என்ற கேள்வியைத் தொடுத்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில் - மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரு மான விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 32ஆவது நினைவு தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.
32ஆவது நினைவுதின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள அவரினின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தர்மலிங்கத்தின் புதல்வருமான சித்தார்த்தன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன்,
எதிர்கட்சித்தலைவர் சி.தவராசா மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், கேசவன் சயந்தன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டதுடன், நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்தியாவின் அழுத்தம் காரணமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடக உருவாக்கப்பட்ட வடமாகாணசபையின் அதிகாரங்கள் சரியாக பயன்படு த்தாது பதவிகளை பங்குபோடுவதற்காக பலர் போட்டியில் ஈடுபடுவதாக வடமா காணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவாசா தனது கவலையை பகீர்ந்துள்ளார்.