Breaking News

தேசிய அடையாள அட்டை மாற்றம் - ஆட்பதிவு திணைக்களம்

இன்று முதல் தேசிய அடையாள அட்டையில்  மாற்றம் ஏற்படவுள்ள தாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவி த்துள்ளது. இலத்திரனியல் அடை யாள அட்டை வழங்கும் நடவடிக்கை யின் முதல் கட்டமாக இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாக திணைக்களம் தெரி வித்துள்ளது.  

இன்று முதல் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சர்வதேச தரத்திலான புகைப்படங்களை தங்கள் அடையாள அட்டை விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டும்.  குறித்த புகைப்படங்களை எடுப்பதற்காக நாடு முழுவதும் 1700 புகைப்பட்ட நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் என்ன என்பது தொடர்பில் பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக ஆட்பதிவு திணைக்கள த்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறித்த தகவல்கள் உள்ளட க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த புகைப்பட நிலையங்களுக்கு தங்கள் முத்திரையுடனாக பதிவு சான்றிதழ் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்பிட்டுள்ளாா்.