Breaking News

விடுதலை தேசத்திற்காய் விழி மூடிய கருவேங்கைகள் நினைவில் இன்று

அம்மா எங்கள்
அன்னை நிலமே !
தங்கத் தமிழீழத்  தாய் திரு நாடே !

உனது அறத்தினை
உனது மறத்தினை

தூக்கிப் பிடித்து
எதிரியின் தளங்களை
தாக்கி அழித்து
வீழ்விலும் நிமிரும்
மாவீரர் புதல்வர்களைப்
பெற்றெடுக்க நீ செய்த
தவம் என்ன கற்றுத் தா...?

கண்ணிவெடி வைத்து
கரத்தடி தொடுத்து
எதிரியே என்னிட
வியலாய் மின்னலாய்
சிலிர்த்து ஓடிட
அடிவான் சிவப்பிலும்
தொடுவான் முடிவிலும்
தமிழீழம் காண்பதில்
என்ன தடை ?.....