லலித் ஜயசிங்கவின் மறியல் இழுத்தடிப்பு !
புங்குடுதீவு மாணவி கொலை வழ க்குத் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில இருக்கு முன்னாள் மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இழு த்தடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று ஊர்காவற்துறை மேலதிக நீதவான் ஆர்.ஈ.சபேசனிடம் முற்படுத்தப்பட்டபோதே இவ் உத்தரவு கிடைத்துள்ளது.
மாணவியின் படு கொலை சம்பம் தொடர்பான பிரதான சந்தேக நபர் சசிகுமார், யாழ்ப்பா ணத்தில் இருந்து வெளியேறுவதற்கு உதவினாா் என்ற குற்றச்சாட்டில் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி லலித் ஜயசிங்க கைதாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.