ஆரம்பப் புள்ளியே இடைக்கால அறிக்கை - மாவை.சோ.சேனாதிராஜா
முஸ்லிம்களுக்கு தனி அலகு வழங்கத்தயார் சந்தர்ப்பத்தை குழப்பக்கூடாது என்கிறார் மாவை
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையானது தேசிய இனப்பிரச்சினைக்கான இறுதி தீர்வல்ல. எமது அடிப்படைக் கோட்பாடுகளு டன் இணக்கம் காண்பதற்கு மேலும் பல கட்டப்பேச்சுக்களை நடத்தவேண்டி யுள் ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ.சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
இணைந்த வடக்கு,கிழக்கில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலேயே தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வு அமையவேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய அவர் முஸ்லிம்களுக்கு தனியான அலகொன்றினை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இடைக்கால அறிக்கையில் பௌத்த மத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் குறித்து தனது மனக் கிலேச்சத்தினையே மஹிந்த வெளியிட்டாரே தவிர அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு முழுமையான எதிர்ப்பினை அவர் காட்டவில்லையெனவும் குறிப்பிட்ட மாவை எம்.பி., சர்வதேசத்தின் ஆதரவு கிடைத்துள்ள தற்போதைய தருணத்தினை குழப்பாது சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் கேட்டுக்கொண்டார்.
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை வௌிவந்துள்ள நிலை யில் அதுகுறித்து எழுந்து விமர்சனங்கள், வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக முஸ்லிம் பிரதிநிதித்துவங்களின் கருத்துக்கள், இடைக்கால அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதியின் நிலைப்பாடும் அவரது அணியினர் தென்னிலங்கையில் மேற்கொள்ளும் பிரசாரங்கள் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்த போதே மாவை.சோ.சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில், யுத்தத்திற்கு பின்னரான ஒரு சூழலில் தமிழ் மக்களின் நிலைமை மோசமாக இருந்தது. நீதிவிசாரணைகள் இன்றிய நிலையில் ஜனநாயகம் மறுதலிக்கப்பட்டவொரு சமூகமாக திட்டமிடப்பட்ட வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த நிலைமைகள் தொடர்ந்தும் நீடித்தமையினால் எமது மக்கள் ஆட்சிமாற்றமொன்றினை எதிர்பார்த்திருந்தனர்.
அதேபோன்று தான் உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்படவேண்டுமென்ற தோற்றப்பாடும் சர்வதேச நாடுகளில் எழுந்திருந்தது.
இவ்வாறான பின்னணியில் தான் ஆட்சி மாற்றம் இடம்பெற்றிருந்தது.
அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தினை தோற்றுவித்து ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தார்கள்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், பொறுப்புக்கூறும் விடத்திலும் உள்நாட்டிலும், ஐ.நாவிலும், சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை வழங் கினார்கள்.
அதனடிப்படையில் முதற்தடவையாக தமிழ் மக்களின் பங்களிப்புடன் புதிய அரசியலமைப்புக்கான உருவாக்கச் செயற்பாடொன்று முன்னெடுக்கப்பட்டது.
அந்த முற்போக்கான நடவடிக்கைக்கு நாமும் முழுமையான பங்களிப்பினைச் செய்திருந்தோம்.
இவ்வாறான நிலைமையில் தான் தற்போது இடைக்கால அறிக்கையொன்று வௌியாகியுள்ளது.
இந்த அறிக்கையில் அனைத்து தரப்பினரினதும் முன்மொழிவுகளும், இணக்கப்பாடு எட்டிய விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது இறுதியான அறி க்கை அல்ல.
ஆகவே அந்த அறிக்கையில் முன்மொழியப்பட்ட விடயங்களை அல்லது ஆலோசிக்கப்பட்ட விடயங்களை மையமாக வைத்து விமர்சனங்களை வௌியிடுவது தவறானதாகும். காரணம் புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப புள்ளியொன்றாகவே நாம் இதனை பார்க்கின்றோம்.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்களைச் செய்யவுள்ளோம்.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆணையப் பெற்றுள்ளது.
இணைந்த வடக்கு கிழக்கில் உள்ளக சுயநிர்ண அடிப்படையிலான தீர்வொன்றையே எதிர்பார்த்து அந்த ஆணையை எமக்கு மக்கள் வழங்கியுள்ளார்கள்.
ஆகவே எமது அடிப்படைக் கோட்பாடுகளுடன் ஒப்பீட்டளவில் பார்க்கையில் இடைக்கால அறிக்கையில் மேலும் பல படிகள் முன்னேற்றம் அடையவேண்டியுள்ளது.
அதிகாரப்பகிர்வு அதியுச்சமாக இடம்பெறவேண்டியுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பாகான நாம் சகல தரப்பினருடனும் தொடர்ந்தும் கலந்துரையாடவேண்டியுள்ளது.
வடக்கு கிழக்கு இணைப்பு தனியலகு அமைக்கலாம்
மிக முக்கியமாக வடக்கு கிழக்கு இணைப்பு விடயம் சம்பந்தமாக நாம் சகோதர முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றோம்.
குறிப்பாக வடக்கு கிழக்கு இணைக்கப்படும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்கு நியாயமான அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான தனியலகு ஒன்றை அமைக்கும் கோரிக்கையை நாம் நிராகரிக்கவில்லை.
அதனை வழங்குவதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.
இது சம்பந்தமாக நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான குழுவினருடனும் ஏனைய சில தரப்புக்களுடனும் பேச்சுக்களை ஏற்கனவே ஆரம்பித்து விட்டோம்.
அந்தப்பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெறும். நிச்சயமாக இரு சமூகத்திற்குமுள்ள ஐயப்பாடுகள் களையப்பட்டு அவை ஆரோக்கியமானதொரு கட்டத்தினை அடையும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
மஹிந்தவுடன் பேசியது இதுதான்
இவ்வாறான நிலையில் அண்மையில் நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடைய தயாரின் மரணச்சடங்கில் கலந்துகொண்டிருந்தேன்.
இதன்போது அங்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் வருகை தந்திருந்தார். அவர் என்னிடத்தில் வடக்கில் நிலைமைகள் எவ்வாறுள்ளன என்று விசாரித்தபோது, நான் உங்களுடைய ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட சற்று முன்னேற்றம் உள்ளது.
ஆனாலும் காணிவிடுவிப்பு உள்ளிட்ட சில விடயங்களில் தாமதங்கள் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தேன்.
அத்தோடு நிறுத்திவிடாது, அண்மையில் எமது தலைவர் சம்பந்தன் உங்களை வந்து சந்தித்ததையும் எங்களிடத்தில் தெரி வித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் உங்களின் ஒத்துழைப்பு எமக்கு அவசியம் வேண்டும் என்றேன். இச்சமயத்தில் மஹிந்த ராஜபக்ஷ, இடைக்கால அறிக்கையில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடம் சம்பந்தமாக என க்கு விமர்சனங்கள் உள்ளன.
ஏனைய விடயங்கள் தொடர்பில் பார்ப்போம் என்றார். அத்தோடு எமது சம்பாசனை நிறைவுக்கு வந்தது. ஆகவே அவர் புதிய அரசியலமைப்புக்கான ஆதரவை வழங்க மாட்டேன் என்று ஒருபோதும் கூறிவில்லை.
எமது தலைவர் அவருடன் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்தவுள்ளார். அதேபோன்று அவர் தலைமையிலான அணியினருடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
முரண்பாடுகள் குறித்து பேசுவோம்
இவ்வாறிருக்கையில் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்சிகளின், தனிப்பட்ட நபர்களின் பின்னிணைப்பு குறித்து முரண்பாடுகள் பல காணப்படுகின்றன.
அவை குறித்து நாம் கலந்துரையாடல்களை தொடர்ந்தும் செய்யவுள்ளோம். ஏற்கனவே நாம் மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, போன்றவற்றுடன் கலந்துரையாடல்களை தனித்தனியாக நடத்தியுள்ளோம் அதேபோன்ற நடவடிக்கைகளை எதிர்காலத்திலும் தொடரவுள்ளோம்.
எம்மைப்பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு இணைந்த வடக்கு கிழக்கில் தங்களுடைய விடயங்களை தாங்களே கையாளக்கூடிய வகையிலாள அதியுச்சமான அதிகரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே நிலைப்பாடாகவுள்ளது.
ஆகவே அதற்குரியவாறான நடவடிக்கைகளை நாம் நிச்சயமாக முன்னகர்த்துவோம்.
சமஷ்டி சாத்தியமே
சமஷ்டி அடிப்படையிலான தீர்வு சாத்தியமாகுமா என்ற சந்தேகம் எழவேண்டிய அவசியமில்லை.
அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எமது கோரிக்கைக்கு வலுச்சேர்ப்பதாக உள்ளது.
குறிப்பாக நான் தமிழரசுக்கட்சியின் செயலாளராக இருந்த காலத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனக் கொள்கையானது நாட்டை பிளவடையச் செய்யும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டு அடிப்படை வாதக்குழுவினர் வழக்குத் தாக்குதல் செய்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் அண்மையில் வௌிவந்த அவ்வழக்கு மீதான தீர்ப்பானது எமது சமஷ்டிக் கோரிக்கைக்கு வலுச்சேர்ப்பதாக உள்ளது. அதேபோன்று கனடாவின் கியூபெக் நகர மக்கள் உள்ளக சுயநிர்ணத்திற்கு உரித்துடையவர்களாக இருக்கின்றார்கள்.
ஆகவே அந்த உதாரணங்கள் எல்லாம் பிளவடையாத நாட்டிற்குள் அத்தகைய உரித்துக்களுக்கு தமிழ் மக்களும் ஏற்புடையவர்கள் என்பதை பறைசாற்று வதாக உள்ளது.
எனவே அதுபோன்ற உதாரணங்கள் எமது நியாயமான கோரிக்கை அடை வதற்கான கலந்துரையாடல்களில் முன்னேற்றங்களை காணப்பதற்கு வழி சமைப்பதாக அமைந்துள்ளது.
சர்வதேசத்தில் ஏற்பட்டுள்ள தருணம்
தற்போது உலக ஒழுங்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பார்க்கின்றபோது சர்வதேசம் தமிழர் தரப்புக்கள் சார்ப்பாக கவனத்தில் கொண்டிருக்கின்ற அதேநேரம், அரசாங்கத்தினை கையாளக்கூ டிய வகையிலும் அவர்களின் நகர்வுகள் அமைந்திருகின்றன.
ஆகவே இத்தகைய ஒரு தருணம் எதிர்காலத்தில் தொடர்ந்தும் நீடிக்குமா என்பது சந்தேகமானது. ஆகவே இரண்டு கட்சிகள் ஒன்றாக இருக்கின்ற சந்த ர்ப்பத்தில் சர்வதேசத்தின் கரிசனை அதிகமான உள்ள தருணத்தில் எமது நியா யமான இலக்கினை அடைவதே புத்திசாதுரியமான விடயமாகும்.
அதனை விடுத்து இச்சந்தர்ப்பத்தினையும் குழப்பியடித்த பின்னர் எதிர்கால த்தில் எவ்வாறான நிலைமைகள் ஏற்படும் என்பதை கூறமுடியாது என்றார்.